Home
Mobile

அதான் Samsung.. ரூ.20,000 க்கு AI அம்சங்களுடன் புது 5G ஸ்மார்ட்போன்.. என்ன மாடல்?

இந்தியாவில், சாம்சங் (Samsung) நிறுவனமானது பிரபலமான ஸ்மார்ட்போன் பிராண்டுகளில் ஒன்றாக இருப்பதற்கு முக்கிய காரணம். இது "வேல்யூ-ஃபார்-மணி ஃபெர்பார்மென்ஸ்" (Value-for-money Performance) அடிப்படையிலான ஸ்மார்ட்போன்களை கொண்டிருப்பதே ஆகும். அதாவது எளிமையாக சொன்னால் "கொடுக்குற காசுக்கு ஏற்ற" போன்கள்!

இந்த வரிசையில்.. 2 புதிய 5ஜி ஸ்மார்ட்போன்கள் கூடிய விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளன. அவைகள் சாம்சங் கேலக்ஸி எம்36 5ஜி (Samsung Galaxy M36 5G) மற்றும் சாம்சங் கேலக்ஸி எப்36 5ஜி (Samsung Galaxy F36 5G) மாடல்கள் ஆகும். எனவே பட்ஜெட்-விலையில் நல்ல அம்சங்கள் மற்றும் 5ஜி ஆதரவு கொண்ட ஸ்மார்ட்போன்களை வாங்க திட்டமிட்டுள்ளவர்கள் - இவ்விரு மாடல்களையுமே கருத்தில் கொள்ளலாம்.

அதான் Samsung.. ரூ.20,000 க்கு AI அம்சங்களுடன் புது 5G ஸ்மார்ட்போன்!

எப்போது அறிமுகம்? இப்போதைக்கு சாம்சங் நிறுவனம் அதன் கேலக்ஸி எம்36 5ஜி ஸ்மார்ட்போனின் வெளியீட்டை மட்டுமே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் சரியான வெளியீட்டு தேதி விரைவில் அறிவிக்கப்படும். இந்த ஸ்மார்ட்போனிற்கான பிரத்யேக பக்கம் இப்போது அமேசான் இந்தியா (Amazon India) வலைத்தளத்தில் நேரலையில் உள்ளது. அதில் "விரைவில்" என்கிற டேக்லைனுடன் குறிப்பிட்ட ஸ்மார்ட்போனின் ரியர் டிசைனை காட்டும் டீஸர் புகைப்படம் மட்டுமே உள்ளது.

குறிப்பிட்ட அமேசான் பக்கத்தில் காட்டப்படும் டீஸர் படம் ஆனது "மான்ஸ்டர் ஐகான்" (Monster AIcon) என்ற டேக்லைனையும் கொண்டுள்ளது. ஐகான் என்கிற வார்த்தையில் ஏஐ (AI) என்கிற எழுத்துக்கள் 'போல்ட்' ஆக இருப்பதை வைத்து பார்க்கும் போது , இந்த ஸ்மார்ட்போன்கள் சில முக்கியமான ஏஐ அம்சங்களுடன் அறிமுகம் செய்யப்படும் என்பதை புரிந்துகொள்ள முடிகிறது.

அதான் Samsung.. ரூ.20,000 க்கு AI அம்சங்களுடன் புது 5G ஸ்மார்ட்போன்!

சாம்சங் கேலக்ஸி எம்36 5ஜி ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? இது என்ன விலைக்கு அறிமுகம் செய்யப்படலாம்? இது எக்ஸிநோஸ் 1380 சிப்செட், 6ஜிபி ரேம் மற்றும் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் அடிப்படையிலான ஒன் யுஐ 7 உடன் அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனின் விலை சுமார் ரூ.20,000-ஐ சுற்றி இருக்கும் (Source: Smartprix.com). நினைவூட்டும் வண்ணம் சாம்சங் கேலக்ஸி எம்35 5ஜி ரூ.19,999 க்கு அறிமுகமானது

முன்னதாக அறிமுகமான சாம்சங் கேலக்ஸி எம்35 5ஜி ஸ்மார்ட்போனின் விரிவான அம்சங்கள்: டிஸ்பிளேவை பொறுத்தவரை இது 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz refresh rate) மற்றும் 1000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் (1000 nits peak brightness) உடனான 6.6-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் சூப்பர் அமோலெட் இன்பினிட்டி-ஓ டிஸ்பிளேவை (Super AMOLED Infinity-O Display) கொண்டுள்ளது.

அதான் Samsung.. ரூ.20,000 க்கு AI அம்சங்களுடன் புது 5G ஸ்மார்ட்போன்!

சிப்செட்டை பொறுத்தவரை இது மாலி-ஜி68 எம்பி5 ஜிபியு (Mali-G68 MP5 GPU) உடனாக ஆக்டா கோர் எக்ஸினோஸ் 1380 (Octacore Exynos 1380) சிப்செட்டை பேக் செய்கிறது. 6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி என்கிற 2 வேரியண்ட்களில் வரும் இந்த ஸ்மார்ட்போனில் மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவும் உள்ளது.

கேமராக்களை பொறுத்தவரை இது 50 எம்பி ப்ரைமரி கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2 எம்பி மேக்ரோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது, முன்பக்கத்தில் 13 எம்பி செல்பீ கேமராவை கொண்டுள்ளது. பேட்டரியை பொறுத்தவரை, சாம்சங் கேலக்ஸி எம்35 5ஜி போன் ஆனது 6000எம்ஏஎச் பேட்டரி கொண்டுள்ளது,. மேலும் இது 25W ஃபாஸ்ட் சார்ஜிங் (25W fast charging) ஆதரவையும் கொண்டுள்ளது.

கவனிக்கப்பட வேண்டிய மற்ற முக்கிய அம்சங்களை பொறுத்தவரை இது 5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 6, ப்ளூடூத் 5.3, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் ஆகிய கனெக்டிவிட்டி ஆப்ஷன்களை கொண்டுள்ளது. இது சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் (Side-mounted Fingerprint Scanner), டால்பி அட்மோஸ் (Dolby Atmos) ஆதரவு உடனான ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo speakers) ஆகிய அம்சங்களையும் கொண்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Samsung Galaxy M36 5G with AI Features India Launch Confirmed Price Could Under Rs 20000
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X