Home
Mobile

நாளை இந்தியாவில் அறிமுகமாகிறது புது Samsung 5ஜி போன்.. 6000mAh பேட்டரி.. 50எம்பி கேமரா.. எந்த மாடல்?

சாம்சங் கேலக்ஸி எம்36 5ஜி (Samsung Galaxy M36 5G) ஸ்மார்ட்போனை நாளை (ஜூன் 27) இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது சாம்சங் நிறுவனம். குறிப்பாக இந்த போன் நாளை மதியம் 12 மணி அளவில் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு அமேசான் தளத்தில் இந்த போன் விற்பனைக்கு வரும். மேலும் ஆன்லைனில் கசிந்த இந்த போனின் விலை மற்றும் அம்சங்களைப் பார்க்கலாம்.

சாம்சங் கேலக்ஸி எம்36 5ஜி அம்சங்கள் (Samsung Galaxy M36 5G Specifications): 6.6-இன்ச் சூப்பர் அமோலெட் டிஸ்பிளே (sAMOLED display) வசதியுடன் இந்த சாம்சங் கேலக்ஸி எம்36 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியும் உள்ளது.

நாளை இந்தியாவில் அறிமுகமாகிறது புது Samsung 5ஜி போன்.. எந்த மாடல்?

எக்ஸிநோஸ் 1380 எஸ்ஒசி (Exynos 1380 SoC) சிப்செட் வசதியுடன் இந்த சாம்சங் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதேபோல் இந்த ஸ்மார்ட்போனில் அனைத்து ஆப்களையும் தடையின்றி பயன்படுத்தலாம்.

50எம்பி பிரைமரி + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2எம்பி மேக்ரோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் உடன் சாம்சங் கேலக்ஸி எம்36 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 13எம்பி கேமராவும் இந்த போனில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த போன் மூலம் 4கே வீடியோக்களை பதிவு செய்ய முடியும்.

அதேபோல் 6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி மற்றும் 12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி என மூன்று வேரியண்ட்களில் இந்த சாம்சங் ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த ஸ்மார்ட்போனில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு உள்ளது.

One UI 7 சார்ந்த ஆண்ட்ராய்டு 15 இயங்குதள வசதியுடன் இந்த புதிய சாம்சங் கேலக்ஸி எம்36 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. ஆனாலும் இந்த ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது சாம்சங் நிறுவனம்.

6000mAh பேட்டரி வசதியுடன் இந்த சாம்சங் கேலக்ஸி எம்36 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. எனவே இந்த ஸமார்ட்போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 25W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் வழங்கப்படும். 5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் இந்த போன் வெளிவரும்.

ஆன்லைனில் வெளியான தகவலின்படி, சாம்சங் கேலக்ஸி எம்36 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ரூ.20,000 பட்ஜெட்டில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. மேலும் இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி எம்36 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy M36 5G will be launched in India tomorrow: check price, specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X