Home
Mobile

செல்லமே சீக்கிரம் வந்திடு.. 6000mAh பேட்டரி.. sAMOLED டிஸ்பிளே.. 25W சார்ஜிங்.. எந்த போன்?

சாம்சங் நிறுவனம் தனது புதிய சாம்சங் கேலக்ஸி எம்36 5ஜி (Samsung Galaxy M36 5G) ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. தற்போது இந்த போனின் டீசர் ஆன்லைனில் வெளியாகி உள்ளது. எனவே கூடிய விரைவில் இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட அதிக வாய்ப்புகள் உள்ளன. இந்நிலையில் சாம்சங் கேலக்ஸி எம்36 5ஜி ஸ்மார்ட்போனின் முக்கிய விவரக்குறிப்புகள் மற்றும் விலை குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது. இது குறித்த தகவல்களை இங்கே பார்க்கலாம்.

சாம்சங் கேலக்ஸி எம்36 5ஜி அம்சங்கள் ( Samsung Galaxy M36 5G Specifications): தரமான எக்ஸிநோஸ் 1380 எஸ்ஒசி (Exynos 1380 SoC) சிப்செட் வசதியுடன் இந்த சாம்சங் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதேபோல் இந்த ஸ்மார்ட்போனில் அனைத்து ஆப்களையும் தடையின்றி பயன்படுத்தலாம்.

செல்லமே சீக்கிரம் வந்திடு.. 6000mAh பேட்டரி.. எந்த போன்?

6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி மற்றும் 12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி என மூன்று வேரியண்ட்களில் இந்த சாம்சங் ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த ஸ்மார்ட்போனில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு உள்ளது.

One UI 7 சார்ந்த ஆண்ட்ராய்டு 15 இயங்குதள வசதியுடன் இந்த புதிய சாம்சங் கேலக்ஸி எம்36 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. ஆனாலும் இந்த ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது சாம்சங் நிறுவனம்.

6.6-இன்ச் சூப்பர் அமோலெட் டிஸ்பிளே (sAMOLED display) வசதியுடன் இந்த சாம்சங் கேலக்ஸி எம்36 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியும் உள்ளது. பெரிய டிஸ்பிளே உடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

50எம்பி ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் உடன் சாம்சங் கேலக்ஸி எம்36 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த ஸ்மார்ட்போன் மூலம் அசத்தலான படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 13எம்பி கேமராவும் இந்த போனில் இருப்பதாக கூறப்படுகிறது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

6000mAh பேட்டரி வசதியுடன் இந்த சாம்சங் கேலக்ஸி எம்36 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. எனவே இந்த ஸமார்ட்போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 25W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் வழங்கப்படும். அதேபோல் 5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் இந்த போன் வெளிவரும்.

மேம்பட்ட ஏஐ அம்சங்கள் இந்த சாம்சங் ஸ்மார்ட்போனில் உள்ளன. ஆன்லைனில் வெளியான தகவலின்படி சாம்சங் கேலக்ஸி எம்36 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ரூ.20,000-க்கு கீழ் அறிமுகமாகும். அனைத்து சிறப்பான அம்சங்களுடன் இந்த சாம்சங் ஸ்மார்ட்போன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy M36 5G specifications and design leaked online: check all details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X