ரூ.5500 விலை குறைப்பு.. Amazon-ல் ஆர்டர்களை அள்ளும் Samsung 5ஜி போன்.. எந்த மாடல்?
சாம்சங் (Samsung) நிறுவனத்தின் புதிய 5ஜி ஸ்மார்ட்போன் ஆக கேலக்ஸி எப்36 5ஜி (Galaxy F36 5G) மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில், அமேசான் இந்தியா (Amazon India) வலைத்தளம் ஆனது கேலக்ஸி எம்36 5ஜி (Galaxy M36 5G) ஸ்மார்ட்போனை அதிரடியான ஆபர் விலையில் விற்பனை செய்து வருகிறது. கேலக்ஸி எம்36 5ஜி ஸ்மார்ட்போனின் அசல் விலை என்ன? ஆபர் விலை என்ன? என்னென்ன அம்சங்கள்? வாருங்கள் விரிவாக பார்க்கலாம்.
இந்த ஸ்மார்ட்போன் சிங்கிள் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷனின் கீழ் வாங்க கிடைக்கிறது. இதன் அசல் வெளியீட்டு விலை ரூ.22,999 ஆகும், ஆனால் அமேசான் இந்தியா வலைத்தளத்தில் தற்போது இது ரூ.17,499 க்கு பட்டியலிடப்பட்டு உள்ளது.

சாம்சங் கேலக்ஸி எம்36 5ஜி ஸ்மார்ட்போனின் அம்சங்கள்: டிஸ்பிளேவை பொறுத்தவரை சாம்சங் கேலக்ஸி எம்36 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.7-இன்ச் FHD பிளஸ் சூப்பர் AMOLED டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இந்த டிஸ்பிளேவின் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் ஆனது மென்மையான வியூவிங் எக்ஸ்பீரியன்ஸை வழங்குகிறது.
மேலும் இந்த டிஸ்பிளே கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் பிளஸ் மூலம் பாதுகாக்கப்படுகிறது மற்றும் கிளாசிக் ஆன வாட்டர் டிராப் நாட்ச் வடிவமைப்பை பெற்றுள்ளது. சிப்செட்டை பொறுத்தவரை சாம்சங் கேலக்ஸி எம்36 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது சாம்சங்கின் இன்-ஹவுஸ் எக்சினோஸ் 1380 சிப்செட்டால் இயக்கப்படுகிறது.
இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 15-ஐ அடிப்படையாக கொண்ட ஒன்யுஐ 15 (OneUI 15) ஓஎஸ் உடன் வருகிறது. சாம்சங் நிறுவனம் இந்த ஸ்மார்ட்போனிற்கு 6 ஆண்டுகள் வரை ஆப்ரேட்டிங் சிஸ்டம் மேம்படுத்தல்கள் கிடைக்கும் என்று உறுதிஸ் செய்துள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் கூகுள் ஜெமினி அடிப்படையிலான பல்வேறு ஏஐ அம்சங்களும் உள்ளன. அதாவது சர்க்கிள்-டு-சர்ச், ஜெமினி லைவ் மற்றும் ஏஐ செலக்ட் ஆகிய அம்சங்கள் உள்ளன.
கேமராக்களை பொறுத்தவரை சாம்சங் கேலக்ஸி எம்36 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) உடனான 50எம்பி ப்ரைமரி கேமராவை உள்ளடக்கிய ட்ரிபிள் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது. இதில் 8MP அல்ட்ரா-வைட் லென்ஸ் மற்றும் 2MP மேக்ரோ சென்சார் ஆகியவைகளும் அடக்கம்
முன்பக்கத்தில் செல்பீகள் மற்றும் வீடியோ கால்களுக்கு, 13MP செல்பீ கேமரா உள்ளது. இதன் கேமரா செட்டப்பில் 4கே வீடியோ ரெகார்ட், நைட் மோட் மற்றும் லோ-லைட் வீடியோ திறன்கள் போன்ற அம்சங்களும் உள்ளன. கடைசியாக, பேட்டரியை பொறுத்தவரை சாம்சங் கேலக்ஸி எம்36 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 25W யூஎஸ்பி டைப்-சி சார்ஜிங்கை ஆதரவு உடனான 5,000mAh பேட்டரியை கொண்டுள்ளது.
புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள சாம்சங் கேலக்ஸி எப்36 5ஜி ஸ்மார்ட்போனின் விலை மற்றும் விற்பனை விவரங்கள் (Samsung Galaxy F36 5G Price and Sale Details) : இந்த ஸ்மார்ட்போனின் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.17,499 க்கும், 8 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.18,999 க்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
சாம்சங்கின் இந்த புதிய எப்-சீரிஸ் ஸ்மார்ட்போன் வருகிற ஜூலை 29 ஆம் தேதி மதியம் 12 மணி முதல் பிரபல இகாமர்ஸ் வலைத்தளம் ஆன பிளிப்கார்ட் மற்றும் சாம்சங்கின் அதிகாரப்பூர்வ ஆன்லைன் ஸ்டோர் வழியாக வாங்க கிடைக்கும். இது கோரல் ரெட், லக்ஸ் வயலட் மற்றும் ஓனிக்ஸ் பிளாக் ஆகிய 3 கலர் ஆப்ஷன்களில் விற்பனை செய்யப்படும். மூன்று கலர் ஆப்ஷன்களிலும் லெதர் பினிஷ் ரியர் பேனல் உள்ளது.


Click it and Unblock the Notifications








