Home
Mobile

பிளிப்கார்ட்டில் அள்ளுங்க.. AMOLED டிஸ்பிளே.. 50எம்பி கேமரா.. ஆஃபரில் Samsung 5ஜி போன்.. எந்த மாடல்?

பிளிப்கார்ட் தளத்தில் தற்போது Flipkart SASA LELE எனும் சிறப்பு நடைபெறுகிறது. இந்த சிறப்பு விற்பனையில் பல அசத்தலான போன்கள் தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது. அதேபோல் சாம்சங் நிறுவனத்தின் ஒரு அசத்தலான 5ஜி போன் தற்போது சலுகை விலையில் வாங்க கிடைக்கிறது.

அதாவது பிளிப்கார்ட் சிறப்பு விற்பனையில் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட சாம்சங் கேலக்ஸி எம்36 5ஜி (Samsung Galaxy M36 5G) ஸ்மார்ட்போனுக்கு 33 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.16,977 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் கூடுதல் சலுகைகளும் கிடைக்கும். ஆகவே இந்த போனை குறைந்த விலையில் வாங்கிவிட முடியும்.

பிளிப்கார்ட்டில் அள்ளுங்க.. ஆஃபரில் Samsung 5ஜி போன்.. எந்த மாடல்?

சாம்சங் கேலக்ஸி எம்36 5ஜி அம்சங்கள் (Samsung Galaxy M36 5G Specifications): ஆக்டா கோர் எக்ஸினோஸ் 1380 (Octa Core Exynos 1380) சிப்செட் உடன் இந்த போன் வெளிவந்தது. மேலும் ஒன் யுஐ 7 (One UI 7) கிடைக்கிறது. ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) மூலம் இந்த போன் இயங்குகிறது. ஆனாலும் இந்த போனுக்கு 6 ஆண்ட்ராய்டு ஓஎஸ் அப்டேட் கிடைக்கும். இதுதவிர பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.

6.7 இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் சூப்பர் அமோலெட் (Super AMOLED) டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவந்தது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 1080 x 2340 பிக்சல்கள், கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் பிளஸ் (Corning Gorilla Glass Victus+) புரொடெக்சன் உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன.

சாம்சங் கேலக்ஸி எம்36 5ஜி ஸ்மார்ட்போன் 50 எம்பி மெயின் கேமரா (ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் டெக்னாலஜி) + 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2 எம்பி மேக்ரோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 13எம்பி கேமரா இதில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் உள்ளன.

6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்டுள்ளது இந்த சாம்சங் கேலக்ஸி எம்36 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவும் உள்ளது. அதேபோல் இந்த ஸ்மார்ட்போனில் கூகுள் ஜெமினி அடிப்படையிலான பல்வேறு ஏஐ அம்சங்களும் உள்ளன. அதாவது சர்க்கிள்-டு-சர்ச், ஜெமினி லைவ் மற்றும் ஏஐ செலக்ட் ஆகிய அம்சங்கள் உள்ளன.

பிளிப்கார்ட்டில் அள்ளுங்க.. ஆஃபரில் Samsung 5ஜி போன்.. எந்த மாடல்?

5000mAh பேட்டரியை கொண்டுள்ளது இந்த சாம்சங் கேலக்ஸி எம்36 5ஜி ஸ்மார்ட்போன். எனவே இந்த போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 25W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. என்பது குறிப்பிடத்தக்கது.

சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side mounted Fingerprint Sensor), யூ.எஸ்.பி டைப்-சி ஆடியோ (USB Type-C audio) உள்ளிட்ட வசதிகள் இந்த போனில் உள்ளன. 5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11 ஏசி, ப்ளூடூத் 5.3, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன. மேலும் இந்த போனின் எடை 197 கிராம் ஆகும்.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy M36 5G phone available at 33 percent discount in Flipkart sasa lele sale
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X