Home
Mobile

ரெடியா இருங்க.. அசல் விலை ரூ.22,999.. ஆபர் விலை ரூ.16,499.. Samsung-ன் புது 5G போன்.. ஜூலை 12 முதல் விற்பனை!

சாம்சங் (Samsung) நிறுவனத்தின் புதிய பட்ஜெட்-விலை 5ஜி ஸ்மார்ட்போன் ஆக சாம்சங் கேலக்ஸி எம்36 5ஜி (Samsung Galaxy M36 5G) மாடல் இன்று (ஜூன் 27) இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சிங்கிள் ஸ்டோரேஜ் ஆப்ஷனின் கீழ் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட்போனின் அசல் அறிமுக விலை நிர்ணயம் என்ன? ஆபர் விலை என்ன? என்னென்ன அம்சங்கள்? எப்போது முதல் விற்பனை? இதோ விவரங்கள்:

சாம்சங் கேலக்ஸி எம்36 5ஜி ஸ்மார்ட்போனின் விலை, ஆபர் மற்றும் விற்பனை விவரங்கள் (Samsung Galaxy M36 5G Price, Offer, Sale Details): முன்னரே குறிப்பிட்டபடி இந்த ஸ்மார்ட்போன் சிங்கிள் ரேம் + ஸ்டோரேஜ் ஆப்ஷனின் கீழ் மட்டும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது: 6GB ரேம் மற்றும் 128GB இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன்.

Samsung-ன் புது 5G போன்.. ஜூலை 12 முதல் விற்பனை!

இதன் அசல் வெளியீட்டு விலை ரூ.22,999 ஆகும், ஆனால் அறிமுக சலுகையின் கீழ் இதை வெறும் ரூ.16,499 க்கு வாங்க முடியும். இப்போதைக்கு ஒரே ஒரு வேரியண்ட் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டு இருந்தாலும் கூட, எதிர்காலத்தில் கூடுதல் ரேம் + ஸ்டோரேஜ் விருப்பங்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது; இருப்பினும் சாம்சங் நிறுவனத்திடமிருந்து இதுகுறித்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இல்லை.

சாம்சங்கின் இந்த புதிய 5ஜி ஸ்மார்போன் ஆனது சாம்சங்கின் அதிகாரப்பூர்வ ஸ்டோர் வழியாக மட்டுமின்றி, பிரபல இகாமர்ஸ் வலைத்தளம் ஆன அமேசான் இந்தியா வழியாகவும் வாங்கலாம். சாம்சங் கேலக்ஸி எம்36 5ஜி ஸ்மார்ட்போனின் விற்பனை வருகிற ஜூலை 12 ஆம் தேதி தொடங்க உள்ளது. இது ஆரஞ்சு ஹெட்ஜ், சைரன் கிரீன் மற்றும் வெல்வெட் பிளாக் ஆகிய 3 கலர் ஆப்ஷன்களில் விற்பனைக்கு வரும்.

சாம்சங் கேலக்ஸி எம்36 5ஜி ஸ்மார்ட்போனின் அம்சங்கள் (Samsung Galaxy M36 5G Specifications, Features): டிஸ்பிளேவை பொறுத்தவரை சாம்சங் கேலக்ஸி எம்36 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.7-இன்ச் FHD பிளஸ் சூப்பர் AMOLED டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இந்த டிஸ்பிளேவின் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் ஆனது மென்மையான வியூவிங் எக்ஸ்பீரியன்ஸை வழங்குகிறது.

மேலும் இந்த டிஸ்பிளே கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் பிளஸ் மூலம் பாதுகாக்கப்படுகிறது மற்றும் கிளாசிக் ஆன வாட்டர் டிராப் நாட்ச் வடிவமைப்பை பெற்றுள்ளது. சிப்செட்டை பொறுத்தவரை சாம்சங் கேலக்ஸி எம்36 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது சாம்சங்கின் இன்-ஹவுஸ் எக்சினோஸ் 1380 சிப்செட்டால் இயக்கப்படுகிறது.

Samsung-ன் புது 5G போன்.. ஜூலை 12 முதல் விற்பனை!

இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 15-ஐ அடிப்படையாக கொண்ட ஒன்யுஐ 15 (OneUI 15) ஓஎஸ் உடன் வருகிறது. சாம்சங் நிறுவனம் இந்த ஸ்மார்ட்போனிற்கு 6 ஆண்டுகள் வரை ஆப்ரேட்டிங் சிஸ்டம் மேம்படுத்தல்கள் கிடைக்கும் என்று உறுதிஸ் செய்துள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் கூகுள் ஜெமினி அடிப்படையிலான பல்வேறு ஏஐ அம்சங்களும் உள்ளன. அதாவது சர்க்கிள்-டு-சர்ச், ஜெமினி லைவ் மற்றும் ஏஐ செலக்ட் ஆகிய அம்சங்கள் உள்ளன.

கேமராக்களை பொறுத்தவரை சாம்சங் கேலக்ஸி எம்36 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) உடனான 50எம்பி ப்ரைமரி கேமராவை உள்ளடக்கிய ட்ரிபிள் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது. இதில் 8MP அல்ட்ரா-வைட் லென்ஸ் மற்றும் 2MP மேக்ரோ சென்சார் ஆகியவைகளும் அடக்கம்

முன்பக்கத்தில் செல்பீகள் மற்றும் வீடியோ கால்களுக்கு, 13MP செல்பீ கேமரா உள்ளது. இதன் கேமரா செட்டப்பில் 4கே வீடியோ ரெகார்ட், நைட் மோட் மற்றும் லோ-லைட் வீடியோ திறன்கள் போன்ற அம்சங்களும் உள்ளன. கடைசியாக, பேட்டரியை பொறுத்தவரை சாம்சங் கேலக்ஸி எம்36 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 25W யூஎஸ்பி டைப்-சி சார்ஜிங்கை ஆதரவு உடனான 5,000mAh பேட்டரியை கொண்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy M36 5G Launched in India Sale Starts From July 12 Price Offer Specifications Features
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X