1 மாசம் தான் ஆகுது.. ரூ.7000 விலை குறைப்பு.. திடீர்னு ஆர்டர்களை அள்ளும் Samsung 5ஜி போன்.. எந்த மாடல்?
அறிமுகமான 1 மாதத்திலேயே சாம்சங் (Samsung) நிறுவனத்தின் லேட்டஸ்ட் பட்ஜெட் விலை 5ஜி ஸ்மார்ட்போன் ஒன்று ரூ.7000 விலை குறைப்பின் கீழ் விற்பனை செய்யப்படுகிறது. அது - சாம்சங் கேலக்ஸி எம்36 5ஜி (Samsung Galaxy M36 5G) மாடல் ஆகும்.
தற்போது இது அமேசான் இந்தியா (Amazon India) வலைதளத்தில் நடக்கும் 2025 சுதந்திர தின சிறப்பு விற்பனையின் (2025 Independence Day Sale) கீழ் ஆபர் விலையில் வாங்க கிடைக்கிறது. நினைவூட்டும் வண்ணம் கடந்த ஜூன் மாத இறுதியில் அறிமுகமான சாம்சங் கேலக்ஸி எம்36 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது சிங்கிள் ரேம் + ஸ்டோரேஜ் ஆப்ஷனின் கீழ் மட்டும் அறிமுகம் செய்யப்பட்டது: 6GB ரேம் மற்றும் 128GB இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன்.

சாம்சங் கேலக்ஸி எம்36 5ஜி ஸ்மார்ட்போனின் அசல் வெளியீட்டு விலை (Original Launch Price) ரூ.22,999 என்று நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. இருப்பினும் அறிமுக சலுகையின் ஒரு பகுதியாக இது ரூ.6,500 தள்ளுபடியை பெற்று, சில நாட்களுக்கு ரூ.16,499 என்கிற ஆபர் விலையில் வாங்க கிடைத்தது.
தற்போது அமேசான் ப்ரீடம் பெஸ்டிவல் சேல் 2025 வழியாக மீண்டும் அந்த ஆபர் கிடைக்கிறது; இம்முறை கூடுதலாக ரூ.500 என மொத்தம் ரூ..7000 டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. அமேசான் இந்தியா வலைதளத்தின் படி, இது பேங்க் மற்றும் கூப்பன் ஆபர் (Bank and Coupon Offer) ஆகிய இரண்டையும் உள்ளடக்கிய விலையாகும். இந்த ஸ்மார்ட்போன் ஆரஞ்சு ஹெட்ஜ், சைரன் கிரீன் மற்றும் வெல்வெட் பிளாக் ஆகிய 3 கலர் ஆப்ஷன்களில் வாங்க கிடைக்கிறது.
சாம்சங் கேலக்ஸி எம்36 5ஜி ஸ்மார்ட்போனின் அம்சங்கள் (Samsung Galaxy M36 5G Specifications, Features): டிஸ்பிளேவை பொறுத்தவரை சாம்சங் கேலக்ஸி எம்36 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.7-இன்ச் FHD பிளஸ் சூப்பர் AMOLED டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இந்த டிஸ்பிளேவின் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் ஆனது மென்மையான வியூவிங் எக்ஸ்பீரியன்ஸை வழங்குகிறது.
மேலும் இந்த டிஸ்பிளே கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் பிளஸ் மூலம் பாதுகாக்கப்படுகிறது மற்றும் கிளாசிக் ஆன வாட்டர் டிராப் நாட்ச் வடிவமைப்பை பெற்றுள்ளது. சிப்செட்டை பொறுத்தவரை சாம்சங் கேலக்ஸி எம்36 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது சாம்சங்கின் இன்-ஹவுஸ் எக்சினோஸ் 1380 சிப்செட்டால் இயக்கப்படுகிறது.
இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 15-ஐ அடிப்படையாக கொண்ட ஒன்யுஐ 15 (OneUI 15) ஓஎஸ் உடன் வருகிறது. சாம்சங் நிறுவனம் இந்த ஸ்மார்ட்போனிற்கு 6 ஆண்டுகள் வரை ஆப்ரேட்டிங் சிஸ்டம் மேம்படுத்தல்கள் கிடைக்கும் என்று உறுதிஸ் செய்துள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் கூகுள் ஜெமினி அடிப்படையிலான பல்வேறு ஏஐ அம்சங்களும் உள்ளன. அதாவது சர்க்கிள்-டு-சர்ச், ஜெமினி லைவ் மற்றும் ஏஐ செலக்ட் ஆகிய அம்சங்கள் உள்ளன.
கேமராக்களை பொறுத்தவரை சாம்சங் கேலக்ஸி எம்36 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) உடனான 50எம்பி ப்ரைமரி கேமராவை உள்ளடக்கிய ட்ரிபிள் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது. இதில் 8MP அல்ட்ரா-வைட் லென்ஸ் மற்றும் 2MP மேக்ரோ சென்சார் ஆகியவைகளும் அடக்கம்.
முன்பக்கத்தில் செல்பீகள் மற்றும் வீடியோ கால்களுக்கு, 13MP செல்பீ கேமரா உள்ளது. இதன் கேமரா செட்டப்பில் 4கே வீடியோ ரெகார்ட், நைட் மோட் மற்றும் லோ-லைட் வீடியோ திறன்கள் போன்ற அம்சங்களும் உள்ளன. கடைசியாக, பேட்டரியை பொறுத்தவரை சாம்சங் கேலக்ஸி எம்36 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 25W யூஎஸ்பி டைப்-சி சார்ஜிங்கை ஆதரவு உடனான 5,000mAh பேட்டரியை கொண்டுள்ளது.


Click it and Unblock the Notifications








