பொளந்து கட்டுது விற்பனை.. ரூ.16,499 பட்ஜெட்ல AMOLED டிஸ்பிளே.. OIS கேமரா.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
அமேசான் பிரைம் டே 2025 (Amazon Price Day 2025) விற்பனையில் சூப்பர் அமோலெட் டிஸ்பிளே, 50 எம்பி மெயின் கேமரா, 5000mAh பேட்டரி, 25W ஃபாஸ்ட் சார்ஜிங் போன்ற பீச்சர்களுடன் வெளியான சாம்சங் கேலக்ஸி எம்36 5ஜி (Samsung Galaxy M36 5G) போனானது ஆர்டருக்கு கிடைக்கிறது. டிஸ்கவுண்ட் போக விற்பனை தொடங்கி இருப்பதால், சாம்சங் பிரியர்கள் அடித்து பிடித்து ஆர்டர் செய்து வருகின்றனர். இந்த புது சாம்சங் மாடலின் பீச்சர்கள், விலை விவரங்கள் இதோ.
சாம்சங் கேலக்ஸி எம்36 5ஜி அம்சங்கள் (Samsung Galaxy M36 5G Specifications): இந்த சாம்சங் போனில் கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ்பிளஸ் (Corning Gorilla Glass Victus+) புரொடெக்சன் கொண்ட 6.7 இன்ச் (1080 x 2340 பிக்சல்கள்) சூப்பர் அமோலெட் (Super AMOLED) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவில் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன் மற்றும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் உள்ளது.

சாம்சங் நிறுவனத்தின் ஒன் யுஐ 7 (One UI 7) கிடைக்கிறது. ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) கொண்ட ஆக்டா கோர் எக்ஸினோஸ் 1380 (Octa Core Exynos 1380) சிப்செட் கிடைக்கிறது. இந்த பட்ஜெட்டில் இருந்தும் 6 ஜெனரேஷன் ஆண்ட்ராய்டு அப்டேட்களையும், 6 வருடங்களுங்கான செக்யூரிட்டி அப்டேட்களையும் பெறலாம். மாலி ஜி68 ஜிபியு (Mali G68 GPU) கிராபிக்ஸ் கார்டை பேக் செய்துள்ளது.
எம் சீரிஸ் மாடல்களில் வழக்கமாக கிடைக்கும் டிரிபிள் ரியர் கேமரா சிஸ்டம் வருகிறது. ஆகவே, 50 எம்பி மெயின் கேமரா (ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் டெக்னாலஜி) + 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2 எம்பி மேக்ரோ கேமரா வருகிறது. 13 எம்பி செல்பீ ஷூட்டர் கிடைக்கிறது. 6 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட வேரியண்ட் விற்பனைக்கு கிடைக்கிறது.

இதுபோக 8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட்கள் கிடைக்கின்றன. இந்த சாம்சங் கேலக்ஸி எம்36 5ஜி போனில் 5000mAh பேட்டரி மற்றும் அதற்கு 25W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட பேக்கப் சிஸ்டம் கிடைக்கிறது. ஆரஞ்சு ஹேஸ் (Orange Haze), வெல்வெட் பிளாக் (Velvet Black) மற்றும் செரீன் கிரீன் (Serene Green) கலர்கள் வருகின்றன.
சாம்சங் கேலக்ஸி எம்36 5ஜி விலை (Samsung Galaxy M36 5G Price): இந்த சாம்சங் போனின் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட்டின் விலை ரூ.17,499 ஆகவும், 8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட்டின் விலை ரூ.18,999ஆகவும் இருக்கிறது. அதேபோல 8 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட்டின் விலை ரூ.20,999ஆக இருக்கிறது. 2 வேரியண்ட்கள் விற்பனைக்கு கிடைக்கின்றன.
அதாவது, 256 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட்டை தவிர மற்ற 2 வேரியண்ட்களையும் அமேசான் பிரைம் டே விற்பனையில் ஆர்டர் செய்து கொள்ளலாம். ரூ.1,000 பேங்க் டிஸ்கவுண்ட் போக விற்பனைக்கு கிடைக்கிறது. ஆகவே, ரூ.16,499 பட்ஜெட்டில் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட்டை ஆர்டர் செய்து கொள்ளலாம். பட்ஜெட்டில் பக்கா மாடலாக இருக்கிறது.


Click it and Unblock the Notifications








