Home
Mobile

சுண்டி இழுக்கும் அமேசான் ஆஃபர்.. 50எம்பி கேமரா.. AMOLED.. கம்மி விலையில் Samsung 5ஜி போன்.. விட்றாதீங்க..

அமேசான் தளத்தில் மிகவும் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் சேல் 2025 (Amazon Great Indian Festival Sale) எனும் சிறப்பு விற்பனை ஆனது வரும் செப்டம்பர் 23-ம் தேதி தொடங்குகிறது இந்த சிறப்பு விற்பனையில் தரமான சாம்சங் கேலக்ஸி எம்36 5ஜி (Samsung Galaxy M36 5G) ஸ்மார்ட்போனை மிகவும் கம்மி விலையில் வாங்க முடியும். இது குறித்த தகவல்களை இங்கே பார்க்கலாம்.

6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட சாம்சங் கேலக்ஸி எம்36 5ஜி ஸ்மார்ட்போன் தற்போது ரூ.17,499 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் செப்டம்பர் 23-ம் தேதி தொடங்கும் அமேசான் சிறப்பு விற்பனையில் இந்த போன் ரூ.13,999 விலையில் வாங்க கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போது இந்த சாம்சங் கேலக்ஸி எம்36 5ஜி ஸ்மார்ட்போனின் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

சுண்டி இழுக்கும் அமேசான் ஆஃபர்.. கம்மி விலையில் Samsung 5ஜி போன்..

சாம்சங் கேலக்ஸி எம்36 5ஜி அம்சங்கள் (Samsung Galaxy M36 5G Specifications): 6.7 இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் சூப்பர் அமோலெட் (Super AMOLED) டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவந்தது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 1080 x 2340 பிக்சல்கள், கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் பிளஸ் (Corning Gorilla Glass Victus+) புரொடெக்சன் உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன.

ஆக்டா கோர் எக்ஸினோஸ் 1380 (Octa Core Exynos 1380) சிப்செட் உடன் இந்த போன் வெளிவந்தது. மேலும் ஒன் யுஐ 7 (One UI 7) கிடைக்கிறது. ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) மூலம் இந்த போன் இயங்குகிறது. ஆனாலும் இந்த போனுக்கு 6 ஆண்ட்ராய்டு ஓஎஸ் அப்டேட் கிடைக்கும். இதுதவிர பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.

மாலி ஜி68 ஜிபியு (Mali G68 GPU) கிராபிக்ஸ் கார்டை கொண்டுள்ளது இந்த சாம்சங் கேலக்ஸி எம்36 5ஜி. எனவே கேமிங் பயனர்கள் இந்த போனை நம்பி வாங்கலாம். ஆரஞ்சு ஹேஸ் (Orange Haze), வெல்வெட் பிளாக் (Velvet Black) மற்றும் செரீன் கிரீன் (Serene Green) நிறங்களில் இந்த போனை வாங்க முடியும். குறிப்பாக இந்த போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.

50 எம்பி மெயின் கேமரா (ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் டெக்னாலஜி) + 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2 எம்பி மேக்ரோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த சாம்சங் கேலக்ஸி எம்36 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 13எம்பி கேமரா இதில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் உள்ளன.

சுண்டி இழுக்கும் அமேசான் ஆஃபர்.. கம்மி விலையில் Samsung 5ஜி போன்..

6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்டுள்ளது இந்த சாம்சங் கேலக்ஸி எம்36 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவும் உள்ளது. அதேபோல் இந்த ஸ்மார்ட்போனில் கூகுள் ஜெமினி அடிப்படையிலான பல்வேறு ஏஐ அம்சங்களும் உள்ளன. அதாவது சர்க்கிள்-டு-சர்ச், ஜெமினி லைவ் மற்றும் ஏஐ செலக்ட் ஆகிய அம்சங்கள் உள்ளன.

5000mAh பேட்டரியை கொண்டுள்ளது இந்த சாம்சங் கேலக்ஸி எம்36 5ஜி ஸ்மார்ட்போன். எனவே இந்த போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 25W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. அனைத்து சிறப்பான அம்சங்களுடன் இந்த போன் கம்மி விலையில் விற்பனைக்கு வரும் என்பதால் நம்பி வாங்கலாம்.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy M36 5G available for purchase at Rs.13999 during Amazon Great Indian Festival sale
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X