வெளுக்குது விற்பனை.. வெறும் ரூ.14,518 போதும்.. 50MP கேமரா.. 6000mAh பேட்டரி.. AMOLED டிஸ்பிளே.. எந்த மாடல்?
சாம்சங் பிரியர்கள் அடிச்சு புடிச்சு ஆர்டர் செய்துவரும் படியான பட்ஜெட்டில் 6000mAh பேட்டரி, அமோலெட் டிஸ்பிளே, 50 எம்பி கேமரா, 25W ஃபாஸ்ட் சார்ஜிங் போன்ற பீச்சர்களை கொண்ட சாம்சங் கேலக்ஸி எம்35 5ஜி (Samsung Galaxy M35 5G) போன் கிடைக்கிறது.
சாம்சங் கேலக்ஸி எம்35 5ஜி பிளிப்கார்ட் சேல் (Samsung Galaxy M35 5G Flipkart Sale): இந்த சாம்சங் போனின் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.19,999 ஆக இருந்தது. இப்போது, பிளிக்ராட் தளத்தில் ஆற்டர் செய்தால் வெறும் ரூ.14,518 பட்ஜெட்டில் ஆர்டர் செய்து கொள்ளலாம்.

இந்த விலை குறைப்புக்கு டெபிட் கார்டு அல்லது கிரெடிட் கார்டு போன்ற எதுவும் தேவை கிடையாது. நேரடியாக இந்த அடிமட்ட விலையில் ஆர்டர் செய்து கொள்ளலாம். ஆகவே, ரூ.5,481 விலை குறைப்பில் இப்போது வாங்கி கொள்ள முடிகிறது. இந்த அடிமட்ட பட்ஜெட்டில் பீச்சர்கள் மிட்-ரேஞ்ச் லெவலுக்கு கிடைக்கிறது.
சாம்சங் கேலக்ஸி எம்35 5ஜி அம்சங்கள் (Samsung Galaxy M35 5G Specifications): இந்த சாம்சங் போனில் 6 ஜிபி ரேம் வேரியண்ட் மட்டுமல்லாமல், 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்களும் கிடைக்கின்றன. இதுபோக 1 டிபிக்கான மைக்ரோஎஸ்டி சிலாட் கிடைக்கிறது.
சாம்சங் நிறுவனத்தின் ஒன் யுஐ 6.1 (One UI 6.1) மற்றும் ஆக்டா கோர் எக்ஸினோஸ் 1380 (Octa Core Exynos 1380) சிப்செட் கொண்ட ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) கிடைக்கிறது. மீடியம் கேமிங் அவுட்புட் எதிர்பார்க்கும்படியான மாலி ஜி68 எம்பி5 ஜிபியு (Mali G68 MP5 GPU) கிராபிக்ஸ் கார்டு கிடைக்கிறது.
இந்த சாம்சங் கேலக்ஸி எம்35 5ஜி போனின் டிஸ்பிளேவில் மிட்-ரேஞ்ச் லெவல் பீச்சர்கள் இருக்கின்றன. ஆகவே, கார்னிங் கொரில்லா கிாளாஸ் விக்டஸ் பிளஸ் (Corning Gorilla Glass Victus Plus) பாதுகாப்பு கொடுக்கும் 6.6 இன்ச் (1080 × 2340 பிக்சல்கள்) ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கிடைக்கிறது.
இந்த சூப்பர் அமோலெட் டிஸ்பிளேவில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 1000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. மிட்-ரேஞ்ச் போன்களுக்கு நிகராக ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (Optical Image Stabilization) டெக்னாலஜி கொண்ட 50 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா கிடைக்கிறது.
மேலும், 2 எம்பி மேக்ரோ கேமரா மற்றும் 13 எம்பி செல்பீ ஷூட்டர் கிடைக்கிறது. இந்த சாம்சங் கேலக்ஸி எம்35 5ஜி போனில் இன்-டிஸ்பிளே சென்சார் கிடையாது. ஆகவே, சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சாருடன் (Side mounted Fingerprint Sensor) பாதுகாப்பு கிடைக்கிறது. 25W ஃபாஸ்ட் சார்ஜிங் இருக்கிறது.
இந்த பட்ஜெட்டில் பக்கா பேக்கப் கொடுக்கும்படி டைப்-சி சார்ஜிங்குடன் 6000mAh பேட்டரி பேக் செய்யப்பட்டுள்ளது. இந்த பேட்டரி இருப்பதால், எடை 222 கிராமாக இருக்கிறது. அதேபோல 9.1 எம்எம் தடிமனில் கிடைக்கிறது. டால்பி அட்மோஸ் (Dolby Atmos), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers), 5ஜி எஸ்ஏ / என்எஸ்ஏ கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








