Home
Mobile

வெயிட்டிங் மோட் ஸ்டார்ட்.. OIS கேமரா.. 6000mAh பேட்டரி.. 25W சார்ஜிங்.. AMOLED டிஸ்பிளே.. எந்த மாடல்?

சூப்பர்-அமோலெட் டிஸ்பிளே, ஓஐஎஸ் கேமரா, 25W சார்ஜிங், 6000mAh பேட்டரி போன்ற பீச்சர்கள் மற்றும் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் சப்போர்ட் கொண்ட சாம்சங் கேலக்ஸி எம்35 5ஜி (Samsung Galaxy M35 5G) போன் வெளியாகி இருக்கிறது. இதுகுறித்த விவரம் இதோ.

இந்த சாம்சங் கேலக்ஸி எம்35 5ஜி மாடலானது, இப்போது பிரேசில் நாட்டில் வெளியாகி இருக்கிறது. இந்தியாவில் விரைவில் வெளியாக இருக்கிறது. இந்த பட்ஜெட்டில் மிரளவிடும் பீச்சர்களை கொண்டிருப்பதால், இந்திய சாம்சங் பிரியர்கள் வெயிட்டிங் மோடில் இருக்கின்றனர். இந்த மாடலின் முழு பீச்சர்கள் மற்றும் விலை விவரங்களை பார்ப்போம்.

வெயிட்டிங் மோட் ஸ்டார்ட்.. OIS கேமரா.. 6000mAh பேட்டரி.. 25W சார்ஜிங்!

சாம்சங் கேலக்ஸி எம்35 5ஜி அம்சங்கள் (Samsung Galaxy M35 5G Specifications): இந்த சாம்சங் மாடலில் 6.6 இன்ச் (1080 x 2340 பிக்சல்கள்) சூப்பர் அமோலெட் (Super AMOLED) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 1000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது.

16 மில்லியன் கலர் டெப்த் வருகிறது. இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) மற்றும் டூயல் ஸ்பீக்கர்கள் (Dual Speakers) வருகின்றன. இந்த சாம்சங் கேலக்ஸி எம்35 5ஜி போனில் ஓஐஎஸ் (OIS) சப்போர்ட் கொண்ட டிரிபிள் ரியர் கேமரா சிஸ்டம் (Triple Rear Camera System) வருகிறது.

10x டிஜிட்டல் ஜூமிங் மற்றும் ஆட்டோபோகஸ் சப்போர்ட் கொண்ட 50 எம்பி மெயின் கேமரா வருகிறது. அதோடு 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா + 2 எம்பி மேக்ரோ கேமரா வருகிறது. இந்த கேமராவில் என்பியு (NPU) மற்றும் 4K வீடியோ ரெக்கார்டிங் சப்போர்ட் உள்ளது.

இந்த சாம்சங் கேலக்ஸி எம்35 5ஜி போனில் 16 எம்பி செல்பீ ஷூட்டர் வருகிறது. 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மற்றும் 2 டிபிக்கானா மைக்ரோஎஸ்டி கார்டு சிலாட் (microSD Card Slot) வருகிறது. அதேபோல டூயல் நானோ சிம் சிலாட் (Dual Nano SIM Slot) கொண்டிருக்கிறது.

ஆண்டார்ய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) மற்றும் ஒன்யுஐ 6.1 (One UI 6.1) கொண்ட ஆக்டா கோர் எக்ஸினோஸ் 1380 5ஜி மொபைல் (Octa Core Exynos 1380 5G Mobile) சிப்செட் வருகிறது. இந்த போனுக்கு 4 ஆண்டராய்டு ஓஎஸ் அப்கிரேட் மற்றும் 5 வருடங்களுக்கான செக்யூரிட்டி அப்டேட்கள் (Security Updates) வருகிறது.

மிட்-ரேஞ்ச் செக்மெண்ட்டில் 6000mAh பேட்டரி கொண்ட மாடலாக இந்த சாம்சங் கேலக்ஸி எம்35 5ஜி போன் இருக்கிறது. 25W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் டைப்-சி சார்ஜிங் போர்ட் (Type-C Charging Port) கொண்டிருக்கிறது. 5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ, ஈசிம், வை-பை 6, ப்ளூடூத் 5.3 கனெக்டிவிட்டி சப்போர்ட் வருகிறது.

8.2 மிமீ தடிமன் மற்றும் 209 கிராம் எடை வருகிறது. டார்க் ப்ளூ (Dark Blue), லைட் ப்ளூ (Light Blue) மற்றும் கிரே (Gray) ஆகிய 3 கலர்களில் விற்பனைக்கு வருகிறது. பிரேசிலில் இந்த போனின் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.43,350ஆக இருக்கிறது. இதே விலையில் இந்தியாவில் அடுத்த சில வாரங்களில் வெளியாகலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Samsung Galaxy M35 5G With 50MP Camera 6000mAh Battery Launched Soon India Here Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X