மிரண்டு போன மார்க்கெட்.. 50MP கேமரா, AMOLED டிஸ்பிளே.. அறிமுகமானது Samsung 5ஜி போன்.. எந்த மாடல்? என்ன விலை?
சாம்சங் நிறுவனம் தனது புதிய கேலக்ஸி எம்35 5ஜி (Samsung Galaxy M35 5G) ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த போன் அமோலெட் இன்பினிட்டி-ஓ டிஸ்பிளே, 50எம்பி பிரைமரி கேமரா, ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் இந்த சாம்சங் போன் வெளிவந்துள்ளது. இப்போது சாம்சங் கேலக்ஸி எம்35 5ஜி போனின் விலை மற்றும் அம்சங்களைப் பார்க்கலாம்.
சாம்சங் கேலக்ஸி எம்35 5ஜி அம்சங்கள் (Samsung Galaxy M35 5G specifications): சக்திவாய்ந்த ஆக்டா கோர் எக்ஸினோஸ் 1380 (Octa Core Exynos 1380 Mobile) சிப்செட் உடன் இந்த புதிய சாம்சங் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் இந்த போனில் மாலி - ஜி68 எம்பி5 ஜிபியு (Mali-G68 MP5 GPU) கிராபிக்ஸ் கார்டு கொடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கேமிங் பயனர்கள் இந்த போனை நம்பி வாங்கலாம்.

6.6-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் சூப்பர் அமோலெட் இன்பினிட்டி-ஓ டிஸ்பிளே (Super AMOLED Infinity-O Display) உடன் இந்த போன் வெளிவரும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz refresh rate) மற்றும் 1000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது. குறிப்பாக இந்த போன் சிறந்த டிஸ்பிளே அனுபவத்தை வழங்கும்.
அதேபோல் 6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி + 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் சாம்சங் கேலக்ஸி எம்35 5ஜி போன் விற்பனைக்கு வரும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது. குறிப்பாக One UI சார்ந்த ஆண்ட்ராய்டு 14 இயங்குதளத்தைக் கொண்டுள்ளது இந்த போன். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் கிடைக்கும்.
50எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி மேக்ரோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த சாம்சங் கேலக்ஸி எம்35 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் செல்பிகளுக்கும் வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 13எம்பி கேமராவைக் கொண்டு வெளிவரும் இந்த சாம்சங் போன். எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இதில் உள்ளன.
சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் ஸ்கேனர்(Side-mounted Fingerprint Scanner)ஆதரவு கொண்டுள்ளது இந்த சாம்சங் கேலக்ஸி எம்35 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் யுஎஸ்பி டைப்-சி ஆடியோ (USB Type-C audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo speakers), டால்பி அட்மோஸ் (Dolby Atmos) உள்ளிட்ட பல சிறப்பான வசதிகள் இந்த போனில் உள்ளன.
6000எம்ஏஎச் பேட்டரி கொண்டுள்ளது இந்த சாம்சங் கேலக்ஸி எம்35 5ஜி போன். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 25 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் (25W fast charging) வசதியும் உள்ளது. 5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ (5G SA /NSA), டூயல் 4ஜி வோல்ட்இ (Dual 4G VoLTE), வைஃபை 6 802.11 ஏஎக்ஸ் (Wi-Fi 6 802.11 ax), புளூடூத் 5.3 (Bluetooth 5.3), ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் ( USB Type-C) உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இதில் உள்ளன.

சாம்சங் கேலக்ஸி எம்35 5ஜி ஸ்மார்ட்போன் மூன்லைட் ப்ளூ (Moonlight Blue), டேய்பிரேக் ப்ளூ (Daybreak Blue), தண்டர் கிரே (Thunder Grey) நிறங்களில் இந்த போனை வாங்க முடியும். ஜூலை 20 முதல் தொடங்கும் அமேசான் பிரைம் டே சேல் எனும் சிறப்பு விற்பனையில் இந்த புதிய சாம்சங் போனை வாங்க முடியும்.
இந்த புதிய சாம்சங் கேலக்ஸி எம்35 5ஜி போன் ரூ.15,999-விலையில் விற்பனைக்கு வரும். குறிப்பாக இந்த சாம்சங் போனுக்கு நல்ல வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








