Home
Mobile

வெளுத்துக் கட்டும் அமேசான்.. ரூ.13749 பட்ஜெட்ல 6000mAh பேட்டரி.. 50MP கேமரா.. ஆஃபரில் சாம்சங் 5ஜி போன்.!

அமேசான் கிரேட் இந்தியன் பெஸ்டிவல் சேல்ஸ் 2024 (Amazon Great Indian Festival Sale 2024) எனும் சிறப்பு விற்பனையில் பல முன்னணி நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்களுக்கு தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த சிறப்பு விற்பனையில் மிகவும் அதிகம் எதிர்பார்த்த சாம்சங் கேலக்ஸி எம்35 5ஜி போனுக்கும் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.

அதாவது அமேசான் சிறப்பு விற்பனையில் சாம்சங் கேல்கஸி எம்35 5ஜி போனுக்கு 39 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.14,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ.1250 தள்ளுபடியும் உள்ளது. எனவே இந்த போனை ரூ.13749 விலையில் வாங்கிவிட முடியும்.

 வெளுத்துக் கட்டும் அமேசான்.. ஆஃபரில் சாம்சங் 5ஜி போன்.!

சாம்சங் கேலக்ஸி எம்35 5ஜி அம்சங்கள் (Samsung Galaxy M35 5G specifications): சக்திவாய்ந்த ஆக்டா கோர் எக்ஸினோஸ் 1380 (Octa Core Exynos 1380 Mobile) சிப்செட் உடன் சாம்சங் கேலக்ஸி எம்35 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்தது. மேலும் இந்த போனில் மாலி - ஜி68 எம்பி5 ஜிபியு (Mali-G68 MP5 GPU) கிராபிக்ஸ் கார்டு கொடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக One UI சார்ந்த ஆண்ட்ராய்டு 14 இயங்குதளத்தைக் கொண்டுள்ளது இந்த போன். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மூன்லைட் ப்ளூ (Moonlight Blue), டேய்பிரேக் ப்ளூ (Daybreak Blue), தண்டர் கிரே (Thunder Grey) நிறங்களில் சாம்சங் கேலக்ஸி எம்35 5ஜி போனை வாங்க முடியும்.

சாம்சங் கேலக்ஸி எம்35 5ஜி ஆனது 6.6-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் சூப்பர் அமோலெட் இன்பினிட்டி-ஓ டிஸ்பிளே (Super AMOLED Infinity-O Display) கொண்டுள்ளது. 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz refresh rate) மற்றும் 1000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி கொண்டுள்ளது இதன் டிஸ்பிளே. பெரிய டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்டுள்ளது இந்த அசத்தலான சாம்சங் கேலக்ஸி எம்35 5ஜி மாடல். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இந்த போனில் அனைத்து ஆப்ஸ்களையும் தடையின்றி பயன்படுத்தலாம்.

50எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி மேக்ரோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த சாம்சங் போன். செல்பிகளுக்கும் வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 13எம்பி கேமராவைக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த சாம்சங் போன். அதேபோல் எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இதில் உள்ளன.

 வெளுத்துக் கட்டும் அமேசான்.. ஆஃபரில் சாம்சங் 5ஜி போன்.!

சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் ஸ்கேனர்(Side-mounted Fingerprint Scanner) ஆதரவு கொண்டுள்ளது சாம்சங் கேலக்ஸி எம்35 5ஜி ஸ்மார்ட்போன். இதுதவிர யுஎஸ்பி டைப்-சி ஆடியோ (USB Type-C audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo speakers), டால்பி அட்மோஸ் (Dolby Atmos) உள்ளிட்ட பல சிறப்பான வசதிகள் இந்த போனில் உள்ளன.

இந்த சாம்சங் கேலக்ஸி எம்35 5ஜி போன் 6000mAh பேட்டரி கொண்டுள்ளது. பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 25 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் (25W fast charging) வசதியும் உள்ளது. 5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ (5G SA /NSA), டூயல் 4ஜி வோல்ட்இ (Dual 4G VoLTE), வைஃபை 6 802.11 ஏஎக்ஸ் (Wi-Fi 6 802.11 ax), புளூடூத் 5.3 (Bluetooth 5.3), ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் ( USB Type-C) உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் உள்ளன.

More from GizBot

Best Mobiles in India

English summary
Samsung Galaxy M35 5G is available at 39 percent discount in Amazon Great Indian Festival sale: Check Details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X