அவசரப்பட்டு எந்த போனும் வாங்காதீங்க.. 6000mAh பேட்டரி.. 50MP கேமரா.. வருகிறது Samsung 5ஜி போன்.. எந்த மாடல்?
சாம்சங் நிறுவனம் தனது புதிய கேலக்ஸி எம்35 5ஜி (Samsung Galaxy M35 5G) ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது தற்போது அமேசான் ( Amazon) தளத்தில் இந்த புதிய போனின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. குறிப்பாக அமேசான் பிரைம் டே 2024 விற்பனை ஜூலை 20-ம் தேதி தொடங்குகிறது. எனவே அதற்கு முன்பு இந்த சாம்சங் கேலக்ஸி எம்35 5ஜி போன் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக டார்க் ப்ளூ (Dark Blue), லைட் ப்ளூ (Light Blue)மற்றும் கிரே (Grey) நிறங்களில் இந்த புதிய சாம்சங் கேலக்ஸி எம்35 5ஜி போன் இந்தியாவுக்கு வரும். மேலும் ஆன்லைனில் வெளியான இந்த சாம்சங் கேலக்ஸி எம்35 5ஜி போனின் அம்சங்களை இப்போது சற்று விரிவாகப் பார்க்கலாம்.

சாம்சங் கேலக்ஸி எம்35 5ஜி அம்சங்கள் (Samsung Galaxy M35 5G specifications): 6.6-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் சூப்பர் அமோலெட் இன்பினிட்டி-ஓ டிஸ்பிளே (Super AMOLED Infinity-O Display) உடன் இந்த போன் வெளிவரும். மேலும் இதன் டிஸ்பிேளிவில் 120ர்ண ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 1000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது.
ஆக்டா கோர் எக்ஸினோஸ் 1380 (Octa Core Exynos 1380 Mobile) சிப்செட் உடன் இந்த புதிய சாம்சங் போன் வெளிவரும். அதேபோல் இந்த போனில் மாலி - ஜி68 எம்பி5 ஜிபியு (Mali-G68 MP5 GPU)கிராபிக்ஸ் கார்டு கொடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கேமிங் பயனர்கள் இந்த போனை நம்பி வாங்கலாம்.
6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி + 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் சாம்சங் கேலக்ஸி எம்35 5ஜி போன் விற்பனைக்கு வரும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது. குறிப்பாக ழுநெ ருஐ 6.1 சார்ந்த ஆண்ட்ராய்டு 14 இயங்குதளத்தைக் கொண்டுள்ளது இந்த போன்.
50எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி மேக்ரோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த சாம்சங் கேலக்ஸி எம்35 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் செல்பிகளுக்கும் வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 13எம்பி கேமராவைக் கொண்டு வெளிவரும் இந்த சாம்சங் போன்.

சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் (Side-mounted Fingerprint Scanner)ஆதரவு கொண்டுள்ளது இந்த சாம்சங் கேலக்ஸி எம்35 5ஜி ஸ்மார்ட்போன். யுஎஸ்பி டைப்-சி ஆடியோ (USB Type-C audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo speakers), டால்பி அட்மோஸ் (Dolby Atmos) உள்ளிட்ட பல சிறப்பான வசதிகள் இந்த போனில் உள்ளன.
6000எம்ஏஎச் பேட்டரி கொண்டுள்ளது இந்த போன். மேலும் இதை சார்ஜ் செய்ய 25 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் (25W fast charging) வசதியும் உள்ளது. 5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ (5G SA /NSA), டூயல் 4ஜி வோல்ட்இ (Dual 4G VoLTE), வைஃபை 6 802.11 ஏஎக்ஸ் (Wi-Fi 6 802.11 ax), புளூடூத் 5.3 (Bluetooth 5.3), ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் ( USB Type-C) உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இதில் உள்ளன. குறிப்பாக ரூ.15,000-க்கு கீழ் இந்த போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications








