Home
Mobile

ஆர்டர் அடி கொளுத்துது.. ரூ.5300 டிஸ்கவுண்ட் பெற்ற Samsung 5ஜி போன்.. 50MP ட்ரிபிள் கேமரா, 6000mAh பேட்டரி!

இந்தியாவில் சாம்சங் (Samsung) நிறுவனத்தின் புதிய 5ஜி ஸ்மார்ட்போன் ஆக கேலக்ஸி எம்36 5ஜி (Galaxy M36 5G) மாடல் அறிமுகமான வேகத்தில், பிளிப்கார்ட் வலைத்தளம் ஆனது சாம்சங் கேலக்ஸி எம்35 5ஜி (Samsung Galaxy M35 5G) மாடல் மீது திடீர் டிஸ்கவுண்ட்-அறிவித்துள்ளது.

சாம்சங் கேலக்ஸி எம்35 5ஜி ஸ்மார்ட்போனின் அசல் அறிமுக விலை என்ன? பிளிப்கார்ட்டில் பட்டியலிடப்பட்டுள்ள ஆபர் விலை என்ன? இது என்னென்ன அம்சங்களை பேக் செய்கிறது? புதிய சாம்சங் கேலக்ஸி எம்36 5ஜி மாடலின் விலை என்ன? அது என்னென்ன அம்சங்களை வழங்குகிறது? இதோ விவரங்கள்:

ஆர்டர் அடி கொளுத்துது.. ரூ.5300 டிஸ்கவுண்ட் பெற்ற Samsung 5ஜி போன்!

சாம்சங் கேலக்ஸி எம்35 5ஜி - அசல் அறிமுக விலை VS ஆபர் விலை: இது கடந்த 2024 ஜூலை மாதத்தில் இந்திய சந்தையில் அறிமுகமானது. அப்போது இந்த ஸ்மார்ட்போனின் 6GB ரேம் + 128GB ஆப்ஷன் ரூ.19,999 க்கும், 8GB ரேம் + 128GB ஆப்ஷன் மற்றும் 8GB ரேம் + 256GB ஆப்ஷன் முறையே ரூ.21,499 மற்றும் ரூ.24,299 க்கும் வாங்க கிடைத்தது.

தற்போது பிளிப்கார்ட் வலைத்தளத்தில் இந்த ஸ்மார்ட்போனின் 6GB ரேம் + 128GB ஆப்ஷன் ரூ.14,695 க்கும், 8GB ரேம் + 128GB ஆப்ஷன் மற்றும் 8GB ரேம் + 256GB ஆப்ஷன் முறையே ரூ.15,056 மற்றும் ரூ.20,949 க்கும் வாங்க கிடைக்கிறது. அதாவது பேஸிக் ஸ்டோரேஜ் ஆப்ஷனின் விலை ரூ.5304 குறைக்கப்பட்டுள்ளது.

ஆர்டர் அடி கொளுத்துது.. ரூ.5300 டிஸ்கவுண்ட் பெற்ற Samsung 5ஜி போன்!

சாம்சங் கேலக்ஸி எம்35 5ஜி ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்:

- 120Hz ரெப்ரெஷ் ரேட்
- கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ்+ பாதுகாப்பு
- 6.6-இன்ச் FHD+ சூப்பர் AMOLED இன்ஃபினிட்டி-ஓ டிஸ்பிளே
- ஆக்டா-கோர் எக்சினோஸ் 1380 சிப்செட்
- ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்

- 50 மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா (f/1.8)
- அல்ட்ரா-வைட் ஆங்கிள் லென்ஸ் (f/2.2) உடன் 8 மெகாபிக்சல் சென்சார்
- 2 மெகாபிக்சல் மேக்ரோ (f/2.4) கேமரா
- முன்பக்கத்தில் (f/2.2) 13-மெகாபிக்சல் செல்பீ கேமரா
- 6000mAh பேட்டரி
- டால்பி அட்மோஸுடன் ஸ்டீரியோ ஸ்பீக்கர்ஸ்
- சாம்சங்கின் நாக்ஸ் செக்யூரிட்டி
- 222 கிராம் எடை

புதிய சாம்சங் கேலக்ஸி எம்36 5ஜி ஸ்மார்ட்போனின் விலை, ஆபர் மற்றும் விற்பனை விவரங்கள் (Samsung Galaxy M36 5G Price, Offer, Sale Details): இந்த ஸ்மார்ட்போனின் சிங்கிள் 6GB ரேம் மற்றும் 128GB இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷனின் அசல் வெளியீட்டு விலை ரூ.22,999 ஆகும், ஆனால் அறிமுக சலுகையின் கீழ் இதை வெறும் ரூ.16,499 க்கு வாங்க முடியும். ஜூலை 12 ஆம் தேதி முதல் ஆரஞ்சு ஹெட்ஜ், சைரன் கிரீன் மற்றும் வெல்வெட் பிளாக் ஆகிய 3 கலர் ஆப்ஷன்களில் விற்பனைக்கு வரும்.

புதிய சாம்சங் கேலக்ஸி எம்36 5ஜி ஸ்மார்ட்போனின் அம்சங்கள் (Samsung Galaxy M36 5G Specifications, Features): டிஸ்பிளேவை பொறுத்தவரை சாம்சங் கேலக்ஸி எம்36 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.7-இன்ச் FHD பிளஸ் சூப்பர் AMOLED டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இந்த டிஸ்பிளேவின் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் ஆனது மென்மையான வியூவிங் எக்ஸ்பீரியன்ஸை வழங்குகிறது.

மேலும் இந்த டிஸ்பிளே கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் பிளஸ் மூலம் பாதுகாக்கப்படுகிறது மற்றும் கிளாசிக் ஆன வாட்டர் டிராப் நாட்ச் வடிவமைப்பை பெற்றுள்ளது. சிப்செட்டை பொறுத்தவரை சாம்சங் கேலக்ஸி எம்36 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது சாம்சங்கின் இன்-ஹவுஸ் எக்சினோஸ் 1380 சிப்செட்டால் இயக்கப்படுகிறது.

இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 15-ஐ அடிப்படையாக கொண்ட ஒன்யுஐ 15 (OneUI 15) ஓஎஸ் உடன் வருகிறது. சாம்சங் நிறுவனம் இந்த ஸ்மார்ட்போனிற்கு 6 ஆண்டுகள் வரை ஆப்ரேட்டிங் சிஸ்டம் மேம்படுத்தல்கள் கிடைக்கும் என்று உறுதிஸ் செய்துள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் கூகுள் ஜெமினி அடிப்படையிலான பல்வேறு ஏஐ அம்சங்களும் உள்ளன. அதாவது சர்க்கிள்-டு-சர்ச், ஜெமினி லைவ் மற்றும் ஏஐ செலக்ட் ஆகிய அம்சங்கள் உள்ளன.

கேமராக்களை பொறுத்தவரை சாம்சங் கேலக்ஸி எம்36 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) உடனான 50எம்பி ப்ரைமரி கேமராவை உள்ளடக்கிய ட்ரிபிள் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது. இதில் 8MP அல்ட்ரா-வைட் லென்ஸ் மற்றும் 2MP மேக்ரோ சென்சார் ஆகியவைகளும் அடக்கம்

முன்பக்கத்தில் செல்பீகள் மற்றும் வீடியோ கால்களுக்கு, 13MP செல்பீ கேமரா உள்ளது. இதன் கேமரா செட்டப்பில் 4கே வீடியோ ரெகார்ட், நைட் மோட் மற்றும் லோ-லைட் வீடியோ திறன்கள் போன்ற அம்சங்களும் உள்ளன. கடைசியாக, பேட்டரியை பொறுத்தவரை சாம்சங் கேலக்ஸி எம்36 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 25W யூஎஸ்பி டைப்-சி சார்ஜிங்கை ஆதரவு உடனான 5,000mAh பேட்டரியை கொண்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy M35 5G gets discount Ahead Samsung Galaxy M36 5G First Sale on July 12
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X