வெளுத்துக் கட்டும் பிளிப்கார்ட்.. 50எம்பி கேமரா.. 6000mAh பேட்டரி.. ஆஃபரில் Samsung 5ஜி போன்.. எந்த மாடல்?
இந்தியாவில் சியோமி, விவோ போன்களை விட சாம்சங் போன்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. காரணம் என்னவென்றால், தனித்துவமான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் சாம்சங் போன்கள் வெளிவருகின்றன. எனவே தான் இந்நிறுவனத்தின் போன்களுக்கு அதிக வரவேற்பு உள்ளன. இந்நிலையில் சாம்சங் கேலக்ஸி எம்34 5ஜி (Samsung Galaxy M34 5G) ஸ்மார்ட்போனுக்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.
அதாவது பிளிப்கார்ட் தளத்தில் சாம்சங் கேலக்ஸி எம்34 5ஜி ஸ்மார்ட்போனுக்கு 39 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.14,899 விலையில் விற்பனை செய்யப்படுகின்றன. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ.675 தள்ளுபடியும் உள்ளது. எனவே இந்த போனை ரூ.14224 விலையில் வாங்கிவிட முடியும்.

சாம்சங் கேலக்ஸி எம்34 5ஜி அம்சங்கள் (Samsung Galaxy M34 5G specifications): தரமான எக்ஸிநோஸ் 1280 சிப்செட் (Exynos 1280 SoC) மூலம் கேலக்ஸி எம்34 5ஜி இயக்கப்படுகிறது. குறிப்பாக இந்த போனுக்கு வழங்கப்பட்ட சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனில் வீடியோ எடிட்டிங் ஆப்ஸ் மற்றும் கேமிங் ஆப்ஸ்களை தடையின்றி பயன்படுத்தலாம்.
50 மெகாபிக்சல் மெயின் கேமரா + 8 மெகாபிக்சல் அல்ட்ராவைடு கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் கொண்டுள்ளது சாம்சங் கேலக்ஸி எம்34 5ஜி போன். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 13 மெகாபிக்சல் கேமரா உள்ளது.
அதேபோல் ஃபன் மோட் (Fun mode) மற்றும் நைட்டோகிராஃபி (Nightography) போன்ற கேமரா அம்சங்களும் இந்த போனில் உள்ளன. சுருக்கமாக கூறவேண்டும் என்றால் இந்த போனின் உதவியுடன் துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் இந்த போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.
6.5-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் அமோஎல்இடி டிஸ்பிளேவை கொண்டு வெளிவந்துள்ளது இந்த அசத்தலான சாம்சங் கேலக்ஸி எம்34 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 செக்யூரிட்டி உள்ளிட்ட பல்வேறு டிஸ்பிளே அம்சங்கள் இநத போனில் உள்ளன. பெரிய டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.
குறிப்பாக 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டுள்ளது இந்த சாம்சங் கேலக்ஸி எம்34 5ஜி மாடல். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது. ஆண்ட்ராய்டு 13 இயங்குதள வசதியுடன் இந்த போன் வெளிவந்தது.

ஆனால் சாம்சங் கேலக்ஸி எம்34 5ஜி-க்கு நான்கு வருட ஆண்ட்ராய்டு அப்டேட்கள் மற்றும் ஐந்து வருட செக்யூரிட்டி அப்டேட்கள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் 25W ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவு உடனான 6000mAh என்கிற 'மான்ஸ்டர்' பேட்டரியை பேக் செய்கிறது. எனவே இந்த போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும்.
சாம்சங் கேலக்ஸி எம்34 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது. இதுதவிர பல்வேறு சிறப்பான அம்சங்கள் இந்த போனில் உள்ளன.


Click it and Unblock the Notifications








