ஜூலை 7 வரை எந்த போனும் வாங்காதீங்க: கம்மி விலையில் வருகிறது Samsung 5ஜி போன்..
சாம்சங் நிறுவனம் அசத்தலான ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்து வருகிறது. குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் ஒவ்வொரு ஸ்மார்ட்போனுக்கும் இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது. இந்நிலையில் சாம்சங் நிறுவனம் ஒரு அசத்தலான 5ஜி போனை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது.
அதாவது ஜூலை 7 ஆம் தேதி இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி எம்34 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது சாம்சங் நிறுவனம். குறிப்பாக இந்த புதிய சாம்சங் 5ஜி போன் ஆனது கம்மி விலையில் வெளிவரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்த போனின் அனைத்து அம்சங்களும் தற்போது வெளியாகி உள்ளது. இப்போது இந்த போனின் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

அதாவது சாம்சங் கேலக்ஸி எம்34 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது தரமான எக்ஸிநோஸ் 1280 சிப்செட் வசதியைக் கொண்டு வெளிவரும். இந்த சிப்செட் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். எனவே இந்த ஸ்மார்ட்போனை நம்பி வாங்கலாம். பின்பு ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் அறிமுகமாகும்.
குறிப்பாக சாம்சங் கேலக்ஸி எம்34 5ஜி ஸ்மார்ட்போன் 50எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்புடன் வெளிவரும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 13எம்பி கேமரா இந்த போனில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த போனின் உதவியுடன் அசத்தலான புகைப்படங்களை எடுக்க முடியும்.

குறிப்பாக 6.5-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் sAMOLED டிஸ்பிளே வசதியுடன் அறிமுகமாகும் இந்த சாம்சங் கேலக்ஸி எம்34 5ஜி ஸ்மார்ட்போன். பின்பு 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 450 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாகக் கொண்டு இந்த கேலக்ஸி எம்34 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவரும்.
6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் வசதியை கொண்டு இந்த சாம்சங் கேலக்ஸி எம்34 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த கேலக்ஸி எம்34 5ஜி ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு உள்ளது.

6000 எம்ஏஎச் பேட்டரி வசதியுடன் இந்த சாம்சங் கேலக்ஸி எம்34 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் தரும். பின்பு பாஸ்ட் சார்ஜிங் வசதி, கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் இந்த கேலக்ஸி எம்34 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும்.
சாம்சங் கேலக்ஸி எம்34 5ஜி ஸ்மார்ட்போன் 5ஜி, 4ஜி வோல்ட்இ, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் வெளிவரும். அதேபோல் மிட்நைட் ப்ளூ, டர்க்கைஸ் மற்றும் சில்வர் நிறங்களில் இந்த புதிய சாம்சங் 5ஜி போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications