Home
Mobile

நாளைக்கு லான்ச் ஆகும் இந்த Samsung 5ஜி போனுக்கு நிறைய பேர் வெயிட்டிங்! அப்படியென்ன ஸ்பெஷல்?

சாம்சங் நிறுவனம் சாம்சங் கேலக்ஸி எம்34 5ஜி ஸ்மார்ட்போனை நாளை (7-6-2023) அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக இந்த புதிய சாம்சங் போன் தரமான சிப்செட், பெரிய டிஸ்பிளே மற்றும் பல்வேறு அசத்தலான அம்சங்களுடன் வெளிவரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் சாம்சங் கேலக்ஸி எம்34 5ஜி ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தேதி நிர்ணயிக்கப்பட்டாலும், வெளியீட்டு நிகழ்வு நேரத்தையோ அல்லது நேரடி ஸ்ட்ரீம்களையோ வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சுருக்கமாகக் கூறவேண்டும் என்றால் இந்த போனின் வெளியீட்டு நிகழ்வு இருக்காது. அதாவது நேரடியாக அமேசான் மற்றும் சாம்சங்.காம் தளங்களில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.

நாளைக்கு லான்ச் ஆகும் இந்த Samsung 5ஜி போனுக்கு நிறைய பேர் வெயிட்டிங்!

மேலும் இப்போது ஆன்லைனில் வெளியான இந்த சாம்சங் கேலக்ஸி எம்34 5ஜி போனின் விலை மற்றும் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம். அதாவது 6.5-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே வசதியுடன் அறிமுகமாகும் இந்த சாம்சங் கேலக்ஸி எம்34 5ஜி ஸ்மார்ட்போன். பின்பு 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 450 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்புடன் இந்த போன் வெளிவரும்.

கேலக்ஸி எம்34 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது தரமான எக்ஸிநோஸ் 1280 சிப்செட் வசதியைக் கொண்டு வெளிவரும். இந்த சிப்செட் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். எனவே இந்த ஸ்மார்ட்போனை நம்பி வாங்கலாம். பின்பு ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

நாளைக்கு லான்ச் ஆகும் இந்த Samsung 5ஜி போனுக்கு நிறைய பேர் வெயிட்டிங்!

50எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்புடன் வெளிவரும் சாம்சங் கேலக்ஸி எம்34 5ஜி ஸ்மார்ட்போன். எனவே இந்த போனின் உதவியுடன் அசத்தலான புகைப்படங்களை எடுக்க முடியும். அதேபோல் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 13எம்பி கேமரா இந்த போனில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு பல்வேறு கேமரா அம்சங்கள் மற்றும் எல்இடி பிளாஷ் ஆதரவுடன் இந்த போன் வெளிவரும்.

சாம்சங் கேலக்ஸி எம்34 5ஜி ஸ்மார்ட்போன் 6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டு வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது. பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த கேலக்ஸி எம்34 5ஜி ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு உள்ளது.

நாளைக்கு லான்ச் ஆகும் இந்த Samsung 5ஜி போனுக்கு நிறைய பேர் வெயிட்டிங்!

நாளை அறிமுகமாகும் இந்த புத்தம் புதிய சாம்சங் கேலக்ஸி எம்34 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6000 எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றியகவலை இருக்காது. பின்பு பாஸ்ட் சார்ஜிங் வசதி, கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் வெளிவரும்.

சாம்சங் கேலக்ஸி எம்34 5ஜி ஸ்மார்ட்போன் 5ஜி, 4ஜி வோல்ட்இ, ஜிபிஎஸ்,யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் வெளிவரும். அதேபோல் இணையத்தில் வெளியான தகவலின்படி, சாம்சங் கேலக்ஸி எம்34 5ஜி ஸ்மார்ட்போன் ரூ.17,999-விலையில் வெளிவரும் என்று கூறப்படுகிறது. மேலும் இந்தியாவில் கேலக்ஸி எம்34 5ஜி போன் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Samsung Galaxy M34 5G phone to launch in India tomorrow: How to watch the launch event,Check Specifications: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X