சிங்கம் களமிறங்கிடுச்சு.. பட்ஜெட் விலையில் டாப் கிளாஸ் அம்சங்கள்.. ஜூலை 7ல் அறிமுகமாகும் புதிய Samsung போன்!
பட்ஜெட் விலையில் 'டாப் கிளாஸ்' அம்சங்களை கொண்ட லேட்டஸ்ட் 5ஜி ஸ்மார்ட்போனை தேடும் பயனர்களை குறிவைத்து, வருகிற ஜூலை 7 ஆம் தேதி அன்று இந்திய சந்தையில் ஒரு புதிய சாம்சங் கேலக்ஸி (Samsung Galaxy) ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்ய்யப்பட உள்ளது.
நாம் இங்கே பேசுவது கேலக்ஸி எம்34 5ஜி (Galaxy M34 5G) ஸ்மார்ட்போனை பற்றித்தான். இன்னும் சில நாட்களில் அறிமுகமாவுள்ள இந்த சாம்சங் ஸ்மார்ட்போனானது அதன் "முன்னோடியை" போலவே, அதாவது கேலக்ஸி எம்33 5ஜி-ஐ போலவே 6000எம்ஏஎச் பேட்டரியை (6000mAh Battery) பேக் செய்கிறது.

சாம்சங் நிறுவனத்தின் கூற்றுப்படி, இதன் 6000எம்ஏஎச் பேட்ரியானது 2 நாட்களுக்கான பேட்டரி லைஃப்பை வழங்கும். இது தவிர்த்து புதிய கேலக்ஸி எம்34 5ஜி ஆனது 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்டை (120Hz Refresh Rate) ஆதரிக்கும் சூப்பர் அமோஎல்இடி (Super AMOLED) டிஸ்பிளேவையும் கொண்டிருக்கும்.
முன்னதாக வெளியான கேலக்ஸி எம்33 5ஜி மாடலில் உள்ள ஐபிஎஸ் எல்சிடி பேனல் உடன் ஒப்பிடும் போது இது உண்மையிலேயே ஒரு மிகப்பெரிய மேம்பாடு ஆகும். மேலும் இந்த ஸ்மார்ட்போனில் 50 மெகாபிக்சல் மெயின் கேமரா (50MP Main Camera) இடம்பெறும் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
சாம்சங்கின் கூற்றுப்படி, இதன் மெயின் கேமராவானது "ஷேக் ஃப்ரீ புகைப்படம் மற்றும் வீடியோவிற்கான" ஓஐஎஸ் (OIS) ஆதரவுடன் வரும். அறியாதோர்களுக்கு ஓஐஎஸ் என்பது ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (Optical Image Stabilisation) என்பதன் சுருக்கமாகும்; இது தெளிவான போட்டோ மற்றும் வீடியோக்களை பதிவு செய்ய உதவும் ஒரு கேமரா தொழில்நுட்ப அம்சமாகும்.
இதன் கேமரா செட்டப்பில் மான்ஸ்டர் ஷாட் 2.0 (Monster Shot 2.0) என்கிற அம்சமும் அடக்கம். இது ஏஐ வழியாக ஒரே ஷாட்டில் நான்கு வீடியோக்கள் மற்றும் நான்கு புகைப்படங்களை கேப்சர் செய்ய உதவுமாம். இதுதவிர்த்து சாம்சங்கின் பிளாக்ஷிப் சீரீஸில் உள்ள நைட்டோகிராஃபி (Nightography) அம்சமும் இதில் சேர்க்கப்பட்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போனில் ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் (Triple Rear Camera Setup) இடம்பெறும் என்பது உறுதி செய்யப்பட்டு விட்டது. இருப்பினும் அதில் அல்ட்ரா வைட் கேமரா லென்ஸ் (Ultra wide camera lens) சேர்க்கப்படுமா இல்லையா என்பது இன்னும் தெளிவுபடுத்தப்படவில்லை.
நாம் மேற்கண்ட எல்லா அம்சங்களுமே சாம்சங் நிறுவனத்தால் மற்றும் அதிகாரப்பூர்வ டீஸர் புகைப்படங்களில் உறுதி செய்யப்பட்ட அம்சங்களாகும். எதிர்பார்க்கப்படும் அம்சங்களை பொறுத்தவரை, இது மீடியாடெக் டைமன்சிட்டி 1080 (MediaTek Dimensity 1080) சிப்செட்டை பேக் செய்யலாம். மேலும் இது ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) மூலம் இயக்கப்படலாம்.
இதன் 6000எம்ஏஎச் பேட்டரியானது 25W ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இருப்பினும் இந்த இடத்தில், சாம்சங் நிறுவனமானது அதன் ஸ்மார்ட்போன்களுடன் சார்ஜர்களை வழங்குவதை நிறுத்திவிட்டது என்பதை நினைவூட்ட விரும்புகிறோம். அதாவது நீங்கள் உங்களுடைய பழைய சார்ஜர்களை பயன்படுத்தலாம்; அல்லது மூன்றாம் தரப்பு சார்ஜர்களை வாங்கலாம்.
எதிர்பார்க்கப்படும் விலை நிர்ணயத்தை பொறுத்தவரை, சாம்சங் கேலக்ஸி எம்34 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ரூ.20,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் அறிமுகமாகலாம். நினைவூட்டும் வண்ணம், கேலக்ஸி எம்33 5ஜி ஸ்மார்ட்போனின் பேஸிக் ஸ்டோரேஜ் ஆப்ஷன் (6ஜிபி + 128ஜிபி) தற்போது ரூ.16,999 க்கு வாங்க கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications