அப்படி போடு.. பட்ஜெட் விலையில் இரண்டு போன்களை களமிறக்கும் Samsung.!
சாம்சங் நிறுவனம் தொடர்ந்து அசத்தலான ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. தற்போது இந்நிறுவனம் அதிகமாக 5ஜி போன்களை அறிமுகம் செய்ய அதிக ஆர்வம் காட்டுகிறது என்றுதான் கூறவேண்டும். இந்நிலையில் சாம்சங் கேலக்ஸி எம்34 5ஜி மற்றும் கேலக்ஸி எப்34 5ஜி போன்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.
குறிப்பாக இந்த சாம்சங் கேலக்ஸி எம்34 5ஜி மற்றும் கேலக்ஸி எப்34 5ஜி போன்கள் அடுத்த மாதம் துவக்கத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் இந்த இரண்டு போன்களும் பட்ஜெட் விலையில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. தற்போது வரை இந்த போன்களின் விவரக்குறிப்புகள் வெளியிடப்படவில்லை. இவற்றின் விவரக்குறிப்புகள் விரைவில் வெளியிடப்பட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இந்நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த சாம்சங் கேலக்ஸி எம்14 ஸ்மார்ட்போனின் அம்சங்களை இப்போது சற்று விரிவாகப் பார்ப்போம். சாம்சங் கேலக்ஸி எம்14 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.6-இன்ச் பிஎல்எஸ் எல்சிடி ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்துள்ளது. ஃபுல் எச்டி டிஸ்பிளே என்பதால் சிறந்த திரை அனுபவம் கிடைக்கும். பின்பு 2408 x 1080 பிக்சல்ஸ், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாகக் கொண்டு இந்த அசத்தலான சாம்சங் போன் வெளிவந்துள்ளது.
சாம்சங் கேலக்ஸி எம்14 5ஜி ஸ்மார்ட்போன் 50எம்பி பிமைரி கேமரா + 2எம்பி மேக்ரோ கேமரா + 2எம்பி டெப்த் கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் தரமான புகைப்படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 13எம்பி கேமராவுடன் இந்த புதிய போன் வெளிவந்துள்ளது.
சாம்சங் கேலக்ஸி எம்14 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ஆக்டோ-கோர் எக்ஸிநோஸ் 1330 பிராசஸர் உடன் Mali G68 GPU ஆதரவைக் கொண்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். பின்பு இந்த கேலக்ஸி எம்14 5ஜி போன் ஆண்ட்ராய்டு 13 இயங்குதள வசதியுடன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும்128ஜிபி ஸ்டோரேஜ் வசதியுடன் இந்த சாம்சங் கேலக்ஸி எம்14 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பின்பு இதில் மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு உள்ளது. அதேபோல் சில்வர், ப்ளூ மற்றும் டார்க் ப்ளூ நிறங்களில் இந்த புதிய சாம்சங் கேலக்ஸி எம்14 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி எம்14 5ஜி ஸ்மார்ட்போனில் 6000 எம்ஏஎச் பேட்டரி வசதி உள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. குறிப்பாக நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும் இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். 25 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் இந்த சாம்சங் 5ஜி போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் இந்த போனில் கைரேகை ஸ்கேனர் வசதி உள்ளது.
5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை, புளூடூத் 5.2, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட், என்எப்சி உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான சாம்சங் கேலக்ஸி எம்14 5ஜி போன். குறிப்பாக இந்த போனின் எடை 206 கிராம் என்பது குறிப்பிடத்தக்கது. 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட சாம்சங் கேலக்ஸி எம்14 5ஜி ஸ்மார்ட்போனின் விலை ரூ.13,490-ஆக உள்ளது. பின்பு இதன் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட வேரியண்டின் விலை ரூ.14,990-ஆக உள்ளது.


Click it and Unblock the Notifications








