லுக் வேற லெவல்: புதிய எமரால்டு பிரவுன் வண்ண விருப்பத்தில் சாம்சங் கேலக்ஸி எம்33, எம்53 5ஜி!

|

சாம்சங் கேலக்ஸி எம்33 5ஜி மற்றும் சாம்சங் கேலக்ஸி எம்53 5ஜி சாதனத்தின் புதிய வண்ண மாறுபாடு அறிமுகம் செய்யப்பட்டுள்ளந. நாட்டில் உள்ள இரண்டு இடைப்பட்ட 5ஜி ஸ்மார்ட்போன்களும் எமரால்டு பிரவுன் வண்ண விருப்பத்தில் கிடைக்கிறது. கேலக்ஸி எம்33 5ஜி மற்றும் கேலக்ஸி எம்53 5ஜி ஆகிய இரண்டும் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இந்தியாவில் தலா இரண்டு வண்ண மாடல்களில் வெளியிடப்பட்டுள்ளது.

கேலக்ஸி எம்33 5ஜி மற்றும் கேலக்ஸி எம்53 5ஜி ஸ்மார்ட்போன்

கேலக்ஸி எம்33 5ஜி மற்றும் கேலக்ஸி எம்53 5ஜி ஸ்மார்ட்போன்

கேலக்ஸி எம்33 5ஜி மற்றும் கேலக்ஸி எம்53 5ஜி ஸ்மார்ட்போனின் எமரால்டு பிரவுன் வண்ண மாறுபாட்டை அமேசான் இந்தியா இணையதளத்தில் வாங்கலாம். அதேபோல் நாடு முழுவதும் உள்ள குறிப்பிட்ட கூட்டாளர்கள் கடைகளில் கிடைக்கும். சாம்சங் கேலக்ஸி எம்33 5ஜி சாதனத்தின் 6 ஜிபி ரேம் மாடல் ரூ.17,999 எனவும் 8ஜிபி ரேம் மாறுபாட்டின் விலை ரூ.19,499 எனவும் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல் அமேசான் தளத்தில் ஐசிஐசிஐ வங்கி டெபிட் மற்றும் கிரெடிட் கார்ட் மூலம் வாங்கினால் ரூ.3000 உடனடி தள்ளுபடியை பெறலாம்.

டெபிட் மற்றும் கிரெடிட் கார்ட்கள் சலுகை

டெபிட் மற்றும் கிரெடிட் கார்ட்கள் சலுகை

அதேபோல் சாம்சங் கேலக்ஸி எம்53 5ஜி சாதனத்தின் 6 ஜிபி ரேம் மாறுபாட்டு விலை ரூ.26,499 எனவும் 8 ஜிபி ரேம் மாறுபாட்டின் விலை ரூ.28,499 எனவும் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. ஐசிஐசிஐ வங்கி டெபிட் மற்றும் கிரெடிட் கார்ட்கள் மூலம் இந்த சாதனம் வாங்கும் போது ரூ.2500 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. சாம்சங் கேலக்ஸி எம்33 5ஜி ஸ்மார்ட்போனானது ப்ளூ மற்றும் க்ரீன் வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது. அதேபோல் கேலக்ஸி எம்53 5ஜி ஸ்மார்ட்போனானது ஓஷன் ப்ளூ மற்றும் மிஸ்டிக் க்ரீன் வண்ண விருப்பத்தில் கிடைக்கிறது.

6,000mAh பேட்டரி அம்சம்

6,000mAh பேட்டரி அம்சம்

Samsung Galaxy M33 5G ஆனது 2408 × 1080 பிக்சல் தீர்மானம், 120Hz புதுப்பிப்பு வீதம், இன்பினிட்டி V நாட்ச் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்புடன் 6.6' இன்ச் முழு HD + LCD டிஸ்பிளேவுடன் வருகிறது. இதன் ஹூட்டின் கீழ், சாம்சங் கேலக்ஸி எம் 33 5ஜி ஆனது மாலி G68 ஜிபியு உடன் இணைந்து ஆக்டா கோர் Exynos 1280 சிப்செட்டைக் கொண்டுள்ளது. இந்த சாம்சங் கேலக்ஸி எம் 33 5ஜி ஸ்மார்ட் போனானது 6,000mAh பேட்டரி மூலம் ஆதரிக்கப்படுகிறது மற்றும் இது 25W வேகமான சார்ஜிங்கை ஆதரிக்கிறது.

சாம்சங் கேலக்ஸி கேமரா அம்சம்

சாம்சங் கேலக்ஸி கேமரா அம்சம்

சாம்சங் கேலக்ஸி எம் 33 5ஜி போனின் கேமரா அம்சத்தைப் பொறுத்தவரை, சாம்சங் கேலக்ஸி எம் 33 5ஜி ஆனது குவாட்-ரியர் கேமரா அமைப்பு மற்றும் LED ஃபிளாஷ் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இதில் 50MP முதன்மை சென்சார், 5MP அல்ட்ரா-வைட்-ஆங்கிள் லென்ஸ், 2MP மேக்ரோ லென்ஸ் மற்றும் 2MP டெப்த் சென்சார் ஆகியவை அடங்கும். செல்ஃபிகள் மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு, இது 8MP முன்பக்க ஷூட்டரை வழங்குகிறது. சாம்சங் கேலக்ஸி எம் 33 5ஜி ஆனது ஆண்ட்ராய்டின் சமீபத்திய பதிப்பான ஆண்ட்ராய்டு 12 உடன் வருகிறது. வழக்கம் போல், நிறுவனத்தின் தனியுரிம OneUI 4.1 ஸ்கின் இதன் மேலே உள்ளது. இது ஒரு டைப்-சி சார்ஜிங் போர்ட், பிரத்தியேக மைக்ரோ-எஸ்டி கார்டு ஸ்லாட், பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனர் மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு

கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு

சாம்சங் கேலக்ஸி எம்53 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.7-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் Infinity-O Super AMOLED + டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 1,080x2,400 பிக்சல் தீர்மானம், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த கேலக்ஸி எம்53 5ஜி ஸ்மார்ட்போன். சாம்சங் கேலக்ஸி எம்53 5ஜி ஸ்மார்ட்போனின் பின்புறம் 108எம்பி பிரைமரி கேமரா (f/1.8 aperture lens) + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார் + 2எம்பி மேக்ரோ கேமரா என மொத்தம் நான்கு கேமராக்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். பின்பு செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Samsung Galaxy M33, M53 5G Smartphones New Color Variant Launched: Now Emerald Brown

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X