Home
Mobile

6000 எம்ஏஎச் பேட்டரி வசதியுடன் வெளிவரும் சாம்சங் கேலக்ஸி எம்33 5ஜி ஸ்மார்ட்போன் மாடல்.!

சாம்சங் நிறுவனம் விரைவில் புதிய கேலக்ஸி எம்33 5ஜி ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. வெளிவந்த தகவலின்படி அடுத்த மாதம் முதல் வாரத்தில் இந்த கேலக்ஸி எம்33 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக இந்த சாதனம் 6000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் வெளிவரும்.

சாம்சங் கேலக்ஸி எம்33 5ஜி

சாம்சங் கேலக்ஸி எம்33 5ஜி

இந்த சாம்சங் கேலக்ஸி எம்33 5ஜி ஸ்மார்ட்போனின் மாடல் எண் EB-BM336ABN என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்த சாதனம் தனித்துவமான அம்சங்களுடன் வெளிவரும் என்பதால் இந்திய சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

சாம்சங் கேலக்ஸி எம்33 5ஜி ஸ்மார்

சாம்சங் கேலக்ஸி எம்33 5ஜி ஸ்மார்ட்போனில் 6000 எம்ஏஎச் பேட்டரி இடம்பெற்றுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு 33 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும். எனவே இந்த சாதனத்தை வேகமாக சார்ஜ் செய்ய முடியும்.

கேலக்ஸி எம்33 5ஜி ஸ்மார்ட்போனில்

அதேபோல் இந்த கேலக்ஸி எம்33 5ஜி ஸ்மார்ட்போனில் 6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை
பயன்படுத்த ஒரு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது.

எம்33 5ஜி ஸ்மார்ட்போனில்

சாம்சங் கேலக்ஸி எம்33 5ஜி ஸ்மார்ட்போனில் மீடியாடெக் அல்லது எக்ஸிநோஸ் சிப்செட் வசதி இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. பின்பு ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

சாம்சங் கேலக்ஸி எம்33 5ஜி

சாம்சங் கேலக்ஸி எம்33 5ஜி ஸ்மார்ட்போனின் பின்புறம் 50எம்பி கேமரா உட்பட மொத்தம் நான்கு கேமராக்கள் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே இந்த ஸ்மார்ட்போன் 32எம்பி கேமராவுடன் வெளிவரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சாம்சங் நிறுவனம் இதற்குமுன்பு அறிமுகம் செய்த சாம்சங் கேலக்ஸி ஏ03 கோர் ஸ்மார்ட்போனின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

சாம்சங் கேலக்ஸி ஏ03 கோர்

சாம்சங் கேலக்ஸி ஏ03 கோர்

சாம்சங் கேலக்ஸி ஏ03 கோர் ஸ்மார்ட்போன் ஆனது 6.5-இன்ச் எச்டி பிளஸ் இன்பினிட்-வி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 20:9 என்ற திரைவிகிதம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்மாடல்.

ம்சங் கேலக்ஸி ஏ03 கோர்

சாம்சங் கேலக்ஸி ஏ03 கோர் ஸ்மார்ட்போனில் UNISOC SC9863A ஆக்டோ-கோர் பிராசஸர் வசதி உள்ளது. எனவே இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போன் மாடல். அதேபோல் ஆண்ட்ராய்டு கோ 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். கண்டிப்பாக இந்த ஸ்மார்ட்போன் பயன்படுத்துவதற்கு மிகவும்
அருமையாக இருக்கும்.

சாம்சங் கேலக்ஸி ஏ03 கோர் ஸ்மார்ட்போனி

சாம்சங் கேலக்ஸி ஏ03 கோர் ஸ்மார்ட்போனில் 2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி வசதி உள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது. சாம்சங் கேலக்ஸி ஏ03 கோர் ஸ்மார்ட்போனின் பின்புறம் 8எம்பி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. மேலும் செல்பீகளுக்கும்,வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 5எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். மேலும் எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமராஅம்சங்கள் இவற்றுள் அடக்கம்.

சாம்சங் கேலக்ஸி ஏ03 கோர்

சாம்சங் கேலக்ஸி ஏ03 கோர் ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 10 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதியுன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. எனவே இந்த சாதனத்தை விரைவில் சார்ஜ் செய்ய முடியும். டூயல் சிம் ஸ்லாட், Wi-Fi 802.11 b/g/n, ப்ளூடூத் 5, மைக்ரோ USB 2.0, 3.5mm ஆடியோ ஜாக், GPS, GLONASSஉள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Samsung Galaxy M33 5G with 6000mah battery will be launched in January 2022 : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X