Home
Mobile

ஏப்ரல் 2 உறுதி: 6000 எம்ஏஎச் பேட்டரி, 120 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே ஆதரவோடு சாம்சங் கேலக்ஸி எம்33 5ஜி!

சாம்சங் கேலக்ஸி எம்33 5ஜி இந்திய வெளியீட்டு தேதி ஏப்ரல் 2-ம் தேதி உறுதிப்படுத்தப்பட்டது. இந்த சாதனம் அமேசான் மூலமாக கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

சாம்சங் கேலக்ஸி எம்33 5ஜி விவரக்குறிப்புகள்

சாம்சங் கேலக்ஸி எம்33 5ஜி விவரக்குறிப்புகள்

சாம்சங் கேலக்ஸி எம்33 5ஜி விவரக்குறிப்புகள் அமேசான் மைக்ரோசைட்-ல் டீஸ் செய்யப்பட்டுள்ளன. சாம்சங் கேலக்ஸி எம்33 5ஜி ஸ்மார்ட்போனானது ஏப்ரல் 2 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு இந்திய அளவில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. தென்கொரிய தொழில்நுட்ப நிறுவனமான சாம்சங் மிட்ரேஞ்ச் சாதனத்தை அமேசான் மைக்ரோசைட் மூலம் வெளியீட்டு தேதியை உறுதிப்படுத்தி இருக்கிறது. ஸ்மார்ட்போனானது 5என்எம் ஆக்டோ கோர் செயலி மூலம் இயக்கப்படும் எந தெரிவிக்கப்படுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போனானது 25 வாட்ஸ் சார்ஜிங் ஆதரவோடு வரும் எனவும் இதில் 6000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டிருக்கும் எனவும் கூறப்படுகிறது. சாம்சங் கேலக்ஸி எம்33 5ஜி இந்திய வெளியீட்டு தேதி ஏப்ரல் 2-ம் தேதி உறுதிப்படுத்தப்பட்டது. இந்த சாதனம் அமேசான் மூலமாக கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதக் காட்சி

120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதக் காட்சி

சாம்சங் கேலக்ஸி எம்33 5ஜி ஸ்மார்ட்போனானது 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதக் காட்சியோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போனானது 6.6 இன்ச் எல்சிடி டிஸ்ப்ளேவைக் கொண்டிருக்கும் என தெரிவிக்கிறது. சாம்சங்கின் வரவிருக்கும் ஸ்மார்ட்போனானது குவாட் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டிருக்கும் என தெரிவிக்கப்படுகிறது. சாம்சங் கேலக்ஸி எம்33 5ஜி சாதனத்தின் இந்திய விலை விவரங்கள் தற்போது வரை வெளியிடவில்லை. இந்த ஸ்மார்ட்போனை வாங்க விரும்புபவர்கள் அமேசானில் உள்ள ‘Notify Me' என்ற பட்டனை கிளிக் செய்து கொள்ளலாம்.

6000 எம்ஏஎச் பேட்டரி வசதி

6000 எம்ஏஎச் பேட்டரி வசதி

சாம்சங் கேலக்ஸி எம்33 5ஜி ஸ்மார்ட்போனானது அமேசான் மைக்ரோசைட் தகவலின்படி, 5என்எம் ஆக்டோகோர் கோர் செயலியை ஹூட்டின் கீழ் பேக் செய்யும் எனவும் இரண்டு ரேம் விருப்பங்களில் கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த சாம்சங் கேலக்ஸி எம்33 5ஜி ஆனது 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வசதியோடும், 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வரும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. சாம்சங் கேலக்ஸி எம்33 5ஜி ஸ்மார்ட்போனானது 25 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவோடு 6000 எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டிருக்கும் என அமேசான் பட்டியல் உறுதிப்படுத்துகிறது.

ஆண்ட்ராய்டு 12 அடிப்படையிலான ஆதரவு

ஆண்ட்ராய்டு 12 அடிப்படையிலான ஆதரவு

சாம்சங் கேலக்ஸி எம்33 5ஜி ஸ்மார்ட்போனின் சில விவரக்குறிப்புகள் இந்த மாத தொடக்கத்தில் டிப்ஸ்டர் மூலம் கசிந்தன. சாம்சங் கேலக்ஸி ஏ13, சாம்சங் கேலக்ஸி ஏ23 மற்றும் சாம்சங் கேலக்ஸி எம்23 5ஜி உடன் உலக சந்தைகளில் அறிமுகம் செய்யப்பட்ட சாம்சங் கேலக்ஸி எம்33 5ஜி உடன் இருக்கிறது. கசிவுத் தகவலின்படி, சாம்சங் கேலக்ஸி எம்33 5ஜி சாதனத்தின் இந்திய மாடல் ஆண்ட்ராய்டு 12 அடிப்படையிலான ஒன் யூஐ 4.1 மூலம் இயங்கும் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனானது 6.6 இன்ச் முழு எச்டி ப்ளஸ் (1,080x2,408 பிக்சல்கள்) டிஸ்ப்ளே மற்றும் 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்துடன் வரும் என கூறப்படுகிறது.

குவாட் ரியர் கேமரா அமைப்பு

குவாட் ரியர் கேமரா அமைப்பு

சாம்சங் கேலக்ஸி எம்33 5ஜி அமேசான் பட்டியலில் காணப்படுவது போல், குவாட் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டிருக்கும். அதேபோல் ஸ்மார்ட்போனின் 50 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 5 எம்பி அல்ட்ரா வைட் ஆங்கிள் கேமரா மற்றும் இரட்டை 2 மெகாபிக்சல் மேக்ரோ மற்றும் டெப்த் கேமரா ஆகியவை இடம்பெறும் என கூறப்படுகிறது. அதேபோல் இந்த ஸ்மார்ட்போனானது செல்பி மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு என 8 எம்பி கேமரா கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் சாம்சங் கேலக்ஸி எம்33 5ஜி ஸ்மார்ட்போனின் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனர் இடம்பெறும் என கூறப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy M33 5G Set to Launch on April 2: Expected Specs, Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X