சாம்சங் கேலக்ஸி எம்33 5ஜி, கேலக்ஸி எம்23 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்.! என்னென்ன அம்சங்கள்.!
சாம்சங் நிறுவனம் புதிய கேலக்ஸி எம்33 5ஜி, கேலக்ஸி எம்23 5ஜி ஸ்மார்ட்போன்களை அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்துள்ளன. ஆனால் இந்த சாதனங்களின் விலை மற்றும் விற்பனை பற்றிய தகவலை வெளியிடவில்லை அந்நிறுவனம். இருந்தபோதிலும் விரைவில் இந்த ஸ்மார்ட்போன்கள் அனைத்து நாடுகளிலும் விற்பனைக்கும் வரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போது கேலக்ஸி எம்33 5ஜி, கேலக்ஸி எம்23 5ஜி ஸ்மார்ட்போன்களின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

சாம்சங் கேலக்ஸி எம்33 5ஜி
சாம்சங் கேலக்ஸி எம்33 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.6-இன்ச் எஃப்எச்டி பிளஸ் dew-drop எல்சிடி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு2,408×1080 பிக்சல் தீர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது. அதேபோல் 6ஜிபி/8ஜிபி ரேம்மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி உள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.

சாம்சங் கேலக்ஸி எம்33 5ஜி ஸ்மார்ட்போனின் பின்புறம் 50எம்பி மெயின் கேமரா + 5எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2எம்பி மேக்ரோ கேமரா + 2எம்பிடெப்த் கேமரா என மொத்தம்நான்கு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. பின்பு செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.

குறிப்பாக கேலக்ஸி எம்33 5ஜி ஸ்மார்ட்போனில் எக்ஸ்நோஸ் 1200 சிப்செட் உள்ளதாக கூறப்படுகிறது. பின்பு One UI 4.1 சார்ந்த ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த அசத்தலான ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த புதிய ஸ்மார்ட்போனில்6000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. பின்பு பச்சை, நீலம் போன்ற நிறங்களில் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி எம்23 5ஜி
சாம்சங் கேலக்ஸி எம்23 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.6-இன்ச் எஃப்எச்டி பிளஸ் dew-dro எல்சிடி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 2408×1080 பிக்சல் தீர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது. அதேபோல் 4ஜிபி ரேம்
மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி உள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.

குறிப்பாக இந்த கேலக்ஸி எம்23 5ஜி ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 750ஜி சிப்செட் வசதி உள்ளது. பின்பு One UI 4.1 சார்ந்தஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன்இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

சாம்சங் கேலக்ஸி எம்23 5ஜி ஸ்மார்ட்போனின் பின்புறம் 50எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2எம்பி டெப்த் கேமரா எனமொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. பின்பு செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவைக்கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல். குறிப்பாக இந்த புதிய ஸ்மார்ட்போன் 5000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் பல்வேறு இணைப்புஆதரவுகளை கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications