Home
Mobile

6000 எம்ஏஎச் பேட்டரியுடன் சாம்சங் கேலக்ஸி எம்32 ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

சாம்சங் நிறுவனம் தனது புதிய சாம்சங் கேலக்ஸி எம்32 ஸ்மார்ட்போன் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக மீடியாடெக் சிப்செட், 6000 எம்ஏஎச் பேட்டரி, 64எம்பி கேமரா உட்பட பல்வேறு அம்சங்களுடன் வெளிவந்துள்ளது கேலக்ஸி எம்32. மேலும் இந்த சாதனத்தின் பல்வேறு அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

 AMOLED Infinity-U டிஸ்பிளே

AMOLED Infinity-U டிஸ்பிளே

சாம்சங் கேலக்ஸி எம்32 ஸ்மார்ட்போன் ஆனது 6.4-இன்ச் எப்எச்டி பிளஸ் சூப்பர் AMOLED Infinity-U டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 800 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல்.

சாம்சங் கேலக்ஸி எம்32

சாம்சங் கேலக்ஸி எம்32 ஸ்மார்ட்போனில் 4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி மெமரி வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன் மாடல். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் வழங்கப்பட்டுள்ளது.

 64எம்பி பிரைமரி (Samsung ISOCELL GW3) சென்சார்

64எம்பி பிரைமரி (Samsung ISOCELL GW3) சென்சார்

சாம்சங் கேலக்ஸி எம்32 ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி பிரைமரி (Samsung ISOCELL GW3) சென்சார் + 8எம்பி அல்ட்ராவைடு லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார் + 2எம்பி மேக்ரோ சென்சார் என மொத்தம் நான்கு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 20எம்பி செல்பீ கேமராவைக் கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன்மாடல்.

 மீடியாடெக் ஹீலியோ ஜி80 சிப்செட்

மீடியாடெக் ஹீலியோ ஜி80 சிப்செட்

சாம்சங் கேலக்ஸி எம்32 ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மீடியாடெக் ஹீலியோ ஜி80 சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது. பின்பு OneUI சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளதால் இயக்கத்திற்குமிகவும் அருமையாக இருக்கும்.

 6000 எம்ஏஎச் பேட்டரி

6000 எம்ஏஎச் பேட்டரி

இந்த ஸ்மார்ட்போனில் 6000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 15 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, கைரேகை சென்சார், ஆடியோவில் டால்பி அட்மோஸ் ஆதரவு உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது
இந்த புதிய சாதனம்.

ட்இ, வைஃபை 802.11 ஏசி (2.4GH

டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11 ஏசி (2.4GHz + 5GHz), புளூடூத் 5, ஜிபிஎஸ் + குளோனாஸ், யூ.எஸ்.பி டைப்-சி மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த சாம்சங் கேலக்ஸி எம்32 மாடல்.

கேலக்ஸி எம்32 ஸ்மார்ட்போனின் விலை

கேலக்ஸி எம்32 ஸ்மார்ட்போனின் விலை

4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட கேலக்ஸி எம்32 ஸ்மார்ட்போனின் விலை ரூ.14,999-ஆக உள்ளது. பின்பு 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட கேலக்ஸி எம்32 மாடலின் விலை ரூ.16,999-ஆக உள்ளது. பின்பு இந்த சாதனம் அமேசான், சாம்சங் இந்தியா ஆன்லைன் ஸ்டோர் போன்ற தளங்களில் விற்பனைக்கு வருகிறது. குறிப்பாக தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்தசாதனத்தை வாங்கினால் குறிப்பிட்ட சலுகைகள் கிடைக்கும்.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy M32 Launched: Specs, Features and More: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X