Home
Mobile

ஆகஸ்ட் 25: இந்தியாவில் அறிமுகமாகும் அசத்தலான சாம்சங் கேலக்ஸி எம்32 5ஜி.!

சாம்சங் நிறுவனம் வரும் ஆகஸ்ட் 25-ம் தேதி தனது புதிய சாம்சங் கேலக்ஸி எம்32 5ஜி ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக இந்த சாதனம் தரமான சிப்செட் வசதியுடன் பட்ஜெட் விலையில் வெளிவரும் என சாம்சங் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போது ஆன்லைனில் வெளிவந்த இந்த சாதனத்தின் அனைத்து அம்சங்களையும் பார்ப்போம்.

சாம்சங் கேலக்ஸி எம்32 5ஜி

சாம்சங் கேலக்ஸி எம்32 5ஜி ஸ்மார்ட்போன் மாடல் 6.5-இன்ச் எப்எச்டி பிளஸ் டிஎப்டி இன்பினிட்டி-வி டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவரும். பின்பு 720x1,600 பிக்சல் தீர்மானம், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு வசதியுடன் இந்த சாதனம் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸி எம்32 5ஜி ஸ்மார்ட்போனில்

சாம்சங் கேலக்ஸி எம்32 5ஜி ஸ்மார்ட்போனில் மீடியாடெக் Dimensity 720 பிராசஸர் வசதி உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த சாதனம் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இயக்கத்திற்கு
மிகவும் அருமையாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது

சங் கேலக்ஸி எம்32 5ஜி

புதிய சாம்சங் கேலக்ஸி எம்32 5ஜி ஸ்மார்ட்போனில் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு இந்த சாதனம் வெளிவரும். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் வழங்கப்படுகிறது.

5எம்பி டெப்த் சென்சார் என

குறிப்பாக செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 13எம்பி செல்பீ கேமரா ஆதரவுடன் இந்த சாம்சங் கேலக்ஸி எம்32 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவரும் என்று கூறப்படுகிறது. பின்பு இந்த சாதனத்தின் பின்புறம் 48எம்பி பிரைமரி சென்சார் + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் +2எம்பி மேக்ரோ + 5எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் நான்கு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

ங் கேலக்ஸி எம்32 5ஜி

அதேபோல் இந்த சாம்சங் கேலக்ஸி எம்32 5ஜி ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி வசதி உள்ளது. எனவே நீண்ட நேரம் கேம் விளையாட முடியும். பின்பு 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, கைரேகை ஸ்கேனர் என பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் இந்த புதிய ஸ்மார்ட்போன்
வெளிவரும்.

 டூயல்-பேண்ட் வைஃபை, ப்ளூடூத்

5ஜி, 4 ஜி எல்டிஇ, டூயல்-பேண்ட் வைஃபை, ப்ளூடூத் வி 5 உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த சாம்சங் கேலக்ஸி எம்32 5ஜி ஸ்மார்ட்போன் மாடல். அதேபோல் இந்த சாதனம் ரூ.20,000-விலையில் அறிமுகம் செய்யப்பட வாய்ப்பு உள்ளது.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy M32 5G with 48 Mega Pixel Camera Launching in India on August 25: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X