விரைவில் அறிமுகமாகும் சாம்சங் கேலக்ஸி எம்32 5ஜி ஸ்மார்ட்போன்.!
சாம்சங் நிறுவனம் தனது புதிய கேலக்ஸி எம்32 5ஜி ஸ்மார்ட்போன் மாடலை விரைவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்த சாதனத்தின் அம்சங்கள் தற்போது ஆன்லைனில் கசிந்துள்ளது. அதேபோல் இந்த கேலக்ஸி எம்32 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது பட்ஜெட் விலையில் வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிவந்த தகவலின்படி கேலக்ஸி எம்32 5ஜி ஸ்மார்ட்போனின் மாடல் எண் SM-M326B/DS என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த புதிய சாதனம் மீடியாடெக் Dimensity 720 SoC சிப்செட் ஆதரவுடன் வெளிவரும் என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் கேலக்ஸி எம்32 5ஜி ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக சாம்சங் கேலக்ஸி எம்32 5ஜி ஸ்மார்ட்போனின் பின்புறம் நான்கு கேமராக்கள் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதியுடன் இந்த அசத்தலான ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும். அதேபோல் இந்த
புதிய சாம்சங் கேலக்ஸி எம்32 5G மாடல் 5000 எம்ஏஎச் பேட்டரி ஆதரவுடன் வெளிவரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதற்குமுன்பு இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட சாம்சங் கேலக்ஸி எம்32 4ஜி ஸ்மார்ட்போனின் அம்சங்களைப் பார்ப்போம்.

சாம்சங் கேலக்ஸி எம்32 4ஜி ஸ்மார்ட்போன் மாடல் 6.4-இன்ச் எப்எச்டி பிளஸ் சூப்பர் AMOLED Infinity-U டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 800 நிட்ஸ் ப்ரைட்னஸ் உள்ளிட்ட சிறப்பான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. எனவே பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.
கேலக்ஸி எம்32 4ஜி ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி பிரைமரி(Samsung ISOCELL GW3) சென்சார் + 8எம்பி அல்ட்ராவைடு லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார் + 2எம்பி மேக்ரோ சென்சார் என மொத்தம் நான்கு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 20எம்பி செல்பீ கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன்.

சாம்சங் கேலக்ஸி எம்32 4ஜி ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மீடியாடெக் ஹீலியோ ஜி80 சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது. பின்பு OneUI சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது என்பது
குறிப்பிடத்தக்கது.
சாம்சங் கேலக்ஸி எம்32 4ஜி ஸ்மார்ட்போனில் 4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி மெமரி வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன் மாடல்.
கேலக்ஸி எம்32 4ஜி ஸ்மார்ட்போனில் 6000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 15 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, கைரேகை சென்சார் உள்ளிட்ட அம்சங்களுடன் இந்த கேலக்ஸி எம்32 4ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. அதேபோல் டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11 ஏசி (2.4GHz + 5GHz), புளூடூத் 5, ஜிபிஎஸ் + குளோனாஸ், யூ.எஸ்.பி டைப்-சி மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் உள்ளிட்ட இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது கேலக்ஸி எம்32 4ஜி ஸ்மார்ட்போன்.
அதேபோல் சாம்சங் கேலக்ஸி எம்32 4ஜி ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை ரூ.14,999-என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விரைவில் வெளிவரும் சாம்சங் கேலக்ஸி எம்32 5ஜி மாடல் இந்தியாவில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.


Click it and Unblock the Notifications