இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி எம்32 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்.! பட்ஜெட் விலை - பிரமாதமான அம்சங்கள்.!
சாம்சங் நிறுவனம் தனது புதிய கேலக்ஸி எம்32 5ஜி ஸ்மார்ட்போனை இன்று இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக பட்ஜெட் விலையில் பிரமாதமான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன். இப்போது சாம்சங் கேலக்ஸி எம்32 5ஜி ஸ்மார்ட்போனின் விலை மற்றும் பல்வேறு அம்சங்களை சற்று விரிவாகப் பார்போம்.

6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட சாம்சங் கேலக்ஸி எம்32 5ஜி ஸ்மார்ட்போனின் விலை ரூ.20,999-ஆக உள்ளது. மேலும் இதன் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட வேரியண்டின் விலை வெளியிடப்படவில்லை. குறிப்பாக அமேசான் வலைத்தளத்தில் வரும் செப்டம்பர் 2-ம் தேதி இந்த புதிய ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும்.

மேலும் கேலக்ஸி எம் 32 5ஜி மாடலை வாங்கும் பயனர்கள் ஐசிஐசிஐ கிரெடிட் கார்டுகள் மற்றும் இஎம்ஐ மூலம் ரூ.2,000 உடனடி தள்ளுபடியைப் பெறலாம். அதேபோல் இந்த சாதனம் கருப்பு மற்றும் நீல நிறங்களில் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இபபோது இந்த சாம்சங் கேலக்ஸி எம்32 5ஜி ஸ்மார்ட்போனின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

இப்போது அறிமுகம் செய்யப்பட்ட சாம்சங் கேலக்ஸி எம்32 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.5-இன்ச் எச்டி பிளஸ் TFT இன்பினிட்டி-வி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 1600 x 720 பிக்சல் தீர்மானம், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 லேயர்உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன்.

இந்த கேலக்ஸி எம்32 5ஜி ஸ்மார்ட்போனில் மீடியாடெக் டைமென்சிட்டி 720 SoC ப்ராசஸர் வசதி உள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 11 அடிப்படையிலான OneUI 3.1 கஸ்டம் ஸ்கின் மூலம் இயங்கும் இந்த அசத்தலான கேலக்ஸி எம்32 5ஜி ஸ்மார்ட்போன். அதேபோல் வீடியோ கேம் வசதிகளுக்கு தகுந்தபடி உருவாக்கப்பட்டுள்ளது இந்த புதிய சாம்சங் ஸ்மார்ட்போன்.

சாம்சங் கேலக்ஸி எம்32 5ஜி ஸ்மார்ட்போனில் 6ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி மெமரி வசதி உள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு வெளிவந்துள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி எம்32 5ஜி ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி கேமரா+ 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 5எம்பி டெப்த் கேமரா + 2எம்பி மேக்ரோ லென்ஸ் என மொத்தம் நான்கு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 13எம்பி செல்பீ கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன்.

இந்த புதிய ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. மேலும் 15 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, கைரேகை ஸ்கேனர் என பல்வேறு சிறப்பான அம்சங்கள் இவற்றுள் அடக்கம். இதுதவிர 5ஜி, 4 ஜி எல்டிஇ, டூயல் பேண்ட் வைஃபை, ப்ளூடூத் 5.1, ஜிபிஎஸ், யூஎஸ்பி டைப்-சி போர்ட் மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த கேலக்ஸி எம்32 5ஜி ஸ்மார்ட்போன்.


Click it and Unblock the Notifications