Samsung கேலக்ஸி M31s ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்! விலை என்ன தெரியுமா?

|

சாம்சங் கேலக்ஸி M31s ஸ்மார்ட்போன் இறுதியாக இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு பிப்ரவரியில் அறிமுகப்படுத்தப்பட்ட சாம்சங் கேலக்ஸி எம் 31 ஸ்மார்ட்போனின் வாரிசாக இந்த ஸ்மார்ட்போன் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தற்பொழுது இந்த புதிய Samsung கேலக்ஸி M31s ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி M31s

சாம்சங் கேலக்ஸி M31s

சாம்சங் கேலக்ஸி M31s இன்று மதியம் 12 மணிக்கு இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஆகஸ்ட் 6ம் தேதி முதல் அமேசான் தளம் வழியாகவும், சாம்சங் நிறுவனத்தின் பிற சில்லறை தளங்கள் வழியாகவும் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் பேசிக் மாடல் இந்தியாவில் வெறும் ரூ .19,499 என்ற விற்பனை விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

விலை

புதிய ஸ்மார்ட்போனின் 8ஜிபி ரேம் 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட வேரியண்ட் மாடல் ரூ. 21,499 என்ற விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் 6,000 எம்ஏஎச் பேட்டரியுடன், 64 மெகாபிக்சல் பிரைமரி லென்ஸ் மற்றும் AMOLED இன்ஃபினிட்டி ஓ டிஸ்ப்ளே உள்ளிட்ட குவாட் ரியர் கேமரா செட்-அப் உடன் சம்சுங் கேலக்சி M31s ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஆக்டா கோர் எக்ஸினோஸ் 9611

சாம்சங் கேலக்ஸி M31s ஸ்மார்ட்போன் மாடல் எண் SM-M317F ஆனது கீக்பெஞ்ச் பட்டியலில் சமீபத்தில் காணப்பட்டது, இதன் படி சாம்சங் கேலக்ஸி M31s ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 10 இயக்க முறைமையில் இயங்குகிறது, மேலும் இது 6 ஜிபி ரேம் உடன் ஆக்டா கோர் எக்ஸினோஸ் 9611 சிப்செட் வழங்கப்பட்டுள்ளது. கீக்பெஞ்ச் பட்டியலின் படி கேலக்ஸி M31s, சிங்கிள் கோர் சோதனையில் 347 புள்ளிகளையும், கீக்பெஞ்ச் பட்டியலில் மல்டி கோர் சோதனையில் சுமார் 1,256 புள்ளிகளையும் பெற்றுள்ளது.

மீரேஜ் ப்ளூ மற்றும் மீரேஜ் பிளாக்

25W சார்ஜிங் ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் 6000 எம்ஏஎச் பேட்டரியுடன் வருகிறது. ஒன்யூஐஐ அடிப்படையிலான ஆண்ட்ராய்டு 10 இல் இயங்கும் இந்த ஸ்மார்ட்போன் பிரத்தியேக மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக 512 ஜிபி வரை விரிவாக்க மெமரி அம்சத்துடன் வருகிறது. புதிய சாம்சங் கேலக்ஸி M31s மீரேஜ் ப்ளூ மற்றும் மீரேஜ் பிளாக் நிறத்தில் வருகிறது.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy M31s with 6000mAh battery, 64MP quad-camera setup launched in India : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X