Samsung கேலக்ஸி M31s ஸ்மார்ட்போன் இந்தியாவில் விரைவில் அறிமுகம்! விலை என்ன தெரியுமா?
சாம்சங் கேலக்ஸி M31s ஸ்மார்ட்போன் இந்த மாத இறுதியில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது என்று சாம்சங் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு பிப்ரவரியில் அறிமுகப்படுத்தப்பட்ட சாம்சங் கேலக்ஸி எம் 31 ஸ்மார்ட்போனின் வாரிசாக இந்த ஸ்மார்ட்போன் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐஏஎன்எஸ் அறிக்கையின்படி, சாம்சங் கேலக்ஸி M31s இந்த மாத இறுதியில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஆகஸ்ட் மாதத்தில் அமேசான் தளம் வழியாகவும், சாம்சங் நிறுவனத்தின் பிற சில்லறை தளங்கள் வழியாகவும் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெறும் ரூ .20,000 என்ற விற்பனை விலையில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சாம்சங் கேலக்ஸி M31s ஸ்மார்ட்போன் மாடல் எண் SM-M317F ஆனது கீக்பெஞ்ச் பட்டியலில் சமீபத்தில் காணப்பட்டது, இதன் படி சாம்சங் கேலக்ஸி M31s ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 10 இயக்க முறைமையில் இயங்குகிறது, மேலும் இது 6 ஜிபி ரேம் உடன் ஆக்டா கோர் எக்ஸினோஸ் 9611 சிப்செட் வழங்கப்பட்டுள்ளது. கீக்பெஞ்ச் பட்டியலின் படி கேலக்ஸி M31s, சிங்கிள் கோர் சோதனையில் 347 புள்ளிகளையும், கீக்பெஞ்ச் பட்டியலில் மல்டி கோர் சோதனையில் சுமார் 1,256 புள்ளிகளையும் பெற்றுள்ளது.

சாம்சங் கேலக்ஸி M31s டி.யூ.வி ரைன்லேண்ட் வலைத்தளத்திலும் காணப்பட்டன. இதில் புதிய ஸ்மார்ட்போன் 128 ஜிபி ஸ்டோரேஜ் உடன் 6,000 எம்ஏஎச் பேட்டரியுடன் வெளிவரலாம் என்று கூறப்பட்டுள்ளது.புதிய சம்சுங் கேலக்சி M31s ஸ்மார்ட்போன், 64 மெகாபிக்சல் பிரைமரி லென்ஸ் மற்றும் AMOLED இன்ஃபினிட்டி ஓ டிஸ்ப்ளே உள்ளிட்ட குவாட் ரியர் கேமரா செட்-அப் உடன் வெளிவரும் என்று தகவல்கள் தெரிவிக்கிறது.

இதற்கிடையில், சாம்சங் நிறுவனம் கேலக்ஸி எம்31 ஸ்மார்ட்போனின் புதிய வேரியண்ட்டை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. புதிய வேரியண்டின் விலை ரூ .19,999 ஆகும். சாஇந்த ஸ்மார்ட்போன் 6000 எம்ஏஎச் பேட்டரியை 15W சார்ஜிங் ஆதரவுடன், ஒன்யூஐஐ அடிப்படையிலான ஆண்ட்ராய்டு 10 இல் இயங்குகிறது. இந்த ஸ்மார்ட்போன் 128 ஜிபி ஸ்டோரேஜ் உடன் பிரத்தியேக மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக 512 ஜிபி வரை விரிவாக்க மெமரி அம்சத்துடன் வருகிறது.


Click it and Unblock the Notifications