Home
Mobile

சாம்சங் கேலக்ஸி எம்31எஸ் ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு: உடனே முந்துங்கள்.!

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எம்31 ஸ்மார்ட்போனுக்கு விலைகுறைப்புஅறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட கேலக்ஸி எம்21எஸ் ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.19,499-ஆக இருந்தது. ஆனால் தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.18,499-விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

அமேசான் போன்ற தளங்களில் இந்த சாதனத்திற்கு விலைகுறைப்பு

அதேபோல் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட கேலக்ஸி எம்21எஸ் ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.21,499-ஆக இருந்தது,ஆனால்
தற்சமயம் அறிவிக்கப்பட்ட விலைகுறைப்பின் மூலம் ரூ.20,499-விலையில் வாங்க முடியும். மேலும் ஆஃப்லைன் கடைகளில் மட்டுமே
விலைகுறைப்பில் இந்த சாதனத்தை வாங்க முடியும். இன்னும் அமேசான் போன்ற தளங்களில் இந்த சாதனத்திற்கு விலைகுறைப்பு
அறிவிக்கப்படவில்லை. இப்போது இந்த சாதனத்தின பல்வேறு அம்சங்களைப் பார்ப்போம்.

6.5-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் சூப்பர் AMOLED இன்பினிட்டி-ஒ டிஸ்பிளே

6.5-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் சூப்பர் AMOLED இன்பினிட்டி-ஒ டிஸ்பிளே

சாம்சங் கேலக்ஸி எம்31எஸ் ஸ்மார்ட்போன் ஆனது 6.5-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் சூப்பர் AMOLED இன்பினிட்டி-ஒ டிஸ்பிளே வடிவமைப்பைக்
கொண்டுள்ளது. பின்பு 2400 x 1080 பிக்சல் தீர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது
இந்த அசத்தலான சாதனம்.

எக்ஸிநோஸ் 9611 பிராசஸர்

எக்ஸிநோஸ் 9611 பிராசஸர்

இந்த ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சாம்சங்-ன் எக்ஸிநோஸ் 9611 பிராசஸர் வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை சாரந்த OneUI வசதி இவற்றுள் இடம்பெற்றுள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். குறிப்பாக இதன் வடிவமைப்பு மிக அருமையாக இருக்கும்.

64எம்பி பிரைமரி லென்ஸ்

64எம்பி பிரைமரி லென்ஸ்

கேலக்ஸி எம்31எஸ் ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி பிரைமரி லென்ஸ் + 12எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ்+ 5எம்பி மேக்ரோ லென்ஸ்
+ 5எம்பி டெப்த் லென்ஸ் என மொத்தம் நான்கு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் 16எம்பி செல்பீ கேமரா உள்ளிட்ட பல்வேறு
அம்சங்கள் இவற்றுள் அடக்கம்.

6000 எம்ஏஎச் பேட்டரி

6000 எம்ஏஎச் பேட்டரி

அதேபோல் இந்த சாதனத்தில் 6000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது, எனவே சார்ஜ் பற்றி கவலை இருக்காது. மேலும் 25 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த சாம்சங் ஸ்மார்ட்போன் மாடல்.

வைஃபை ஏசி, புளூடூத், ஜிபிஎஸ்,

4 ஜி ஆதரவு வைஃபை ஏசி, புளூடூத், ஜிபிஎஸ், மைக்ரோ யூ.எஸ்.பி மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம். இந்த சாம்சங் கேலக்ஸி எம்31எஸ் ஸ்மார்ட்போனில் கைரேகை ஸ்கேனர் வசதி இடம்பெற்றுள்ளது.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy M31s Price Slashed in India: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X