அட்டகாச அம்சங்களோடு சாம்சங் கேலக்ஸி எம் 31 ப்ரைம் அறிமுகம்!

|

நான்கு கேமராக்கள், 6 ஜிபி ரேம் அம்சங்களோடு சாம்சங் கேலக்ஸி எம் 31 ப்ரைம் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் விற்பனை அமேசான் பண்டிகை தினத்தின் முதல்நாளில் இருந்து தொடங்குகிறது.

சாம்சங் புதிய மாடல் ஸ்மார்ட்போன்

சாம்சங் புதிய மாடல் ஸ்மார்ட்போன்

சாம்சங் புதிய மாடல் ஸ்மார்ட்போனை சாம்சங் கேலக்ஸி எம் 31 ப்ரைம் என்ற பெயரில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பண்டிகை காலங்களில் நுகர்வோருக்காக அமேசான்.இன் உடன் இணைந்து சிறப்பு பதிப்பாக ஸ்மார்ட்போன் உருவாக்கப்பட்டது. இது முன்பே நிறுவப்பட்ட சில அமேசான் சுற்றுச்சூழல் பயன்பாடுகளை கொண்டுள்ளது. அமேசான் கிரேட் இந்தியன் விற்பனை விழாவின் முதல் நாளில் இந்த ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும். அமேசான் ப்ரைம் உறுப்பினர்கள் இந்த ஸ்மார்ட்போனை ஒரு நாளுக்கு முன்பாகவே முன்பதிவு செய்யலாம்.

சாம்சங் கேலக்ஸி எம் 31 ப்ரைம்: விலை

சாம்சங் கேலக்ஸி எம் 31 ப்ரைம்: விலை

சாம்சங் கேலக்ஸி எம் 31 பிரைம் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஒரே வேரியண்டுடன் வருகிறது. இந்த சாதனத்தின் விலை ரூ.16,499 ஆகும். இந்த சாதனம் ஓஷன் ப்ளூ, ஸ்பேஸ் பிளாக் மற்றும் ஐஸ்பெர்க் ப்ளூ ஆகிய வண்ண விருப்பங்களில் கிடைக்கும். அமேசானின் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனை ஆரம்பிக்கும் நாளான அக்டோபர் 17 முதல் இந்த சாதனம் விற்பனைக்கு வரும். அமேசான் ப்ரைம் உறுப்பினர்கள் அக்டோபர் 16 ஆம் தேதி ஸ்மார்ட்போனை வாங்கலாம்.

ரூ.1,000 அமேசான் பே கேஷ்பேக்

ரூ.1,000 அமேசான் பே கேஷ்பேக்

ப்ரைம் உறுப்பினர்கள் அக்டோபர் 16 ஆம் தேதி ஸ்மார்ட்போனை வாங்கும் போது ரூ.1,000 அமேசான் பே கேஷ்பேக் பெறுவார்கள். இந்த சாதனம் சாம்சங்கின் அதிகாரப்பூர்வ வலைதளம் மற்றும் சில்லறை கடைகள் மூலம் விற்பனைக்கு வரும். அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனை மூலம் சாதனத்தை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு எச்.டி.எஃப்.சி கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளில் 10% உடனடி தள்ளுபடி கிடைக்கும்.

ஆன்லைன் வகுப்பு: ஜூம் அழைப்பை துண்டிக்க மறந்த ஆசிரியர்கள் செய்த காரியம்- பள்ளி நிர்வாகம் நடவடிக்கை!ஆன்லைன் வகுப்பு: ஜூம் அழைப்பை துண்டிக்க மறந்த ஆசிரியர்கள் செய்த காரியம்- பள்ளி நிர்வாகம் நடவடிக்கை!

சாம்சங் கேலக்ஸி எம் 31 பிரைம்: அம்சங்கள்

சாம்சங் கேலக்ஸி எம் 31 பிரைம்: அம்சங்கள்

கடந்த பிப்ரவரி மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட கேலக்ஸி எம் 31 ஸ்மார்ட்போன்களில் சில அம்சங்கள் கேலக்ஸி எம் 31 ப்ரைம்மில் உள்ளது. கேலக்ஸி எம் 31 ப்ரைம் ஆண்ட்ராய்டு 10 ஆதரவோடு வருகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் 6.4 இன்ச் முழு எச்டி + இன்ஃபினிட்டி-யு டிஸ்ப்ளே உள்ளது. இந்த சாதனம் ஆக்டாகோர் எக்ஸினோஸ் 9611 செயலி மூலம் இயக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்பு உள்ளது.

குவாட் பின்புற கேமரா அமைப்பு

குவாட் பின்புற கேமரா அமைப்பு

கேலக்ஸி எம் 31 ஸ்மார்ட்போனானது குவாட் பின்புற கேமரா அமைப்பு இருக்கிறது. அது 64 மெகாபிக்சல் முதன்மை சென்சார், 8 மெகாபிக்சல் இரண்டாம் நிலை சென்சார், 5 மெகாபிக்சல் மூன்றாம் நிலை சென்சார் மற்றும் 5 மெகாபிக்சல் சென்சார் ஆகியவை அடங்கும். சாதனத்தின் முன்புறத்தில் 32 மெகாபிக்சல் செல்பி கேமரா உள்ளது. இந்த சாதனம் 5W வேகமான சார்ஜிங் ஆதரவுடன் 6,000 mAh பேட்டரியைக் கொண்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy M31 Prime Launched in India with Quad Camera Setup: Here the Details

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X