Home
Mobile

ரூ.14,999-விலையில், 64எம்பி கேம், 6000எம்ஏஎச் பேட்டரியுடன் விற்பனைக்கு வந்த Samsung Galaxy M31.!

சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி எம்31 ஸ்மார்ட்போன் மாடலை விற்பனைக்கு கொண்டுவந்துள்ளது, கடந்த சில வாரங்களாக இந்த ஸ்மார்ட்போனின் வருகைக்கு அதிக எதிர்பார்ப்பு கிளம்பியது, காரணம் இந்த ஸ்மார்ட்போனுக்கு அதிக விளம்பரங்கள் கிடைத்தது.

அமேசான் மற்றும் சாம்சங்.காம்

அமேசான் மற்றும் சாம்சங்.காம்

குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் அமேசான் மற்றும் சாம்சங்.காம் போன்ற வலைதளங்களில் விற்பனைக்கு வந்துள்ளது. மேலும் இந்த சாதனத்தின் சிறப்பம்சங்கள் மற்றும் விலை உள்ளிட்ட பல்வேறு தகவல்களைப் பார்ப்போம்.

1080 x 2340 பிக்சல்

1080 x 2340 பிக்சல்

சாம்சங் கேலக்ஸி எம்31 ஸ்மார்ட்போன் ஆனது 6.4-இன்ச் எப்எச்டி பிளஸ் சூப்பர் AMOLEDஇன்பினிட்டி-யு டிஸ்பிளேவடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 1080 x 2340 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாககொண்டு வெளிவந்துள்ளது.

 எக்ஸிநோஸ் 9611 ஆக்டோ-கோர் எஸ்ஒசி

எக்ஸிநோஸ் 9611 ஆக்டோ-கோர் எஸ்ஒசி

இந்த ஸ்மார்ட்போனில் எக்ஸிநோஸ் 9611 ஆக்டோ-கோர் எஸ்ஒசி சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது, எனவே இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

64எம்பி பிரைமரி கேமரா

64எம்பி பிரைமரி கேமரா

கேலக்ஸி எம்31 ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி வைடு ஆங்கிள் லென்ஸ்+ 5எம்பி டெப்த் கேமரா + 5எம்பி மேக்ரோ லென்ஸ் என மொத்தம் நான்கு கேமரா பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் 32எம்பி செல்பீ கேமரா, எல்இடி, பிளஸ், கைரேகை சென்சார், பேஸ்அன்லாக், ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு ஆதரவுகள் இவற்றில் உள்ளது.

 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி

64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி

இந்த கேலக்ஸி எம்31 ஸ்மார்ட்போனில் 6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது, மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது. பின்பு நீலம், கருப்பு
உள்ளிட்ட நிறங்களில் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.

6000எம்ஏஎச் பேட்டரி

6000எம்ஏஎச் பேட்டரி

இந்த ஸ்மார்ட்போனில் 6000எம்ஏஎச் பேட்டரி இடம்பெற்றுள்ளது,எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது, குறிப்பாக வீடியோ கேம், வீடியோ போன்ற பல்வேறு வசதிகளுக்கு இந்த ஸ்மார்ட்போன் அருமையாக பயன்படும். மேலும் 15வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

இணைப்பு ஆதரவுகள்

இணைப்பு ஆதரவுகள்

சாம்சங் கேலக்ஸி எம்31 ஸ்மார்ட்போனில் புளூடூத் 5, வைஃபை 802.11, யுஎஸ்பி டைப்-சி போர்ட், ஜிபிஎஸ், டூயல் சிம் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம். மேலும் இந்த சாதனத்தின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

அட்டகாசமான விலை

அட்டகாசமான விலை

6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி கொண்ட கேலக்ஸி எம்31 ஸ்மார்ட்போனின் விலை ரூ.14,999/-
6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி கொண்ட கேலக்ஸி எம்31 ஸ்மார்ட்போனின் விலை ரூ.15,999/-

Best Mobiles in India

English summary
Samsung Galaxy M31 First Sale Today via Amazon and Samsung Online Store : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X