விரைவில் பட்ஜெட் விலையில் அறிமுகமாகும் சாம்சங் கேலக்ஸி எம்13 5ஜி ஸ்மார்ட்போன்.! முழு விவரம்.!
சாம்சங் நிறுவனம் விரைவில் கேலக்ஸி எம்13 5ஜி ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்த புதியஸ்மார்ட்போன் தனித்துவமான அம்சங்களுடன் பட்ஜெட் விலையில் வெளிவரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்போது ஆன்லைனில் கசிந்த சாம்சங் கேலக்ஸி எம்13 5ஜி ஸ்மார்ட்போனின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.
சாம்சங் கேலக்ஸி எம்13 5ஜி

சாம்சங் கேலக்ஸி எம்13 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.5-இன்ச் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவரும். பின்பு 1080 பிக்சல் தீர்மானம், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 450 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த அட்டகாசமான ஸ்மர்ட்போன் அறிமுகம் செய்யப்படும்.
குறிப்பாக கேலக்ஸி எம்13 5ஜி ஸ்மார்ட்போனில் 50எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2எம்பி டெப்த் கேமரா + 2எம்பி மேக்ரோ என மொத்தம் நான்கு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. பின்பு செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 13எம்பி கேமரா ஆதரவுடன் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் வெளிவரும்.

சாம்சங் கேலக்ஸி எம்15 5ஜி ஸ்மார்ட்போனில் மீடியாடெக் சிப்செட் வசதி இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஆண்ட்ராய்டு 12 இயங்குதள வசதியுடன் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் சாம்சங் கேலக்ஸி எம்15 5ஜி ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 15 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி,கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட பல அட்டகாசமான அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும். மேலும்
இந்நிறுவனம் கடந்த மாதம் அறிமுகம் செய்த சாம்சங் கேலக்ஸி எம்53 5ஜி ஸ்மார்ட்போனின் அம்சங்களைப் பார்ப்போம்.
சாம்சங் கேலக்ஸி எம்53 5ஜி

சாம்சங் கேலக்ஸி எம்53 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.7-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் Infinity-O Super AMOLED + டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 1,080x2,400 பிக்சல் தீர்மானம், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த கேலக்ஸி எம்53 5ஜி ஸ்மார்ட்போன்.
சாம்சங் கேலக்ஸி எம்53 5ஜி ஸ்மார்ட்போனின் பின்புறம் 108எம்பி பிரைமரி கேமரா (f/1.8 aperture lens) + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார் + 2எம்பி மேக்ரோ கேமரா என மொத்தம் நான்கு கேமராக்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். பின்பு செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன்.
இந்த புதிய ஸ்மார்ட்போனில் 6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி வசதி உள்ளது. பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்தஅட்டகாசமான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி எம்53 5ஜி ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் மீடியாடெக் Dimensity 900 சிப்செட் வசதி உள்ளது. குறிப்பாக கேமிங் உள்ளிட்ட வசதிகளுக்கும் இந்த ஸ்மார்ட்போன் மிக அருமையாக இருக்கும். பின்பு One UI 4.1 சார்ந்த ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.
சாம்சங் கேலக்ஸி எம்53 5ஜி ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. பின்பு இதை சார்ஜ் செய்ய 25 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கைரேகை சென்சார் உட்பட பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன். 5ஜி, 4ஜி எல்டிஇ, வைஃபை, புளூடூத் வி5.2, ஜிபிஎஸ்/ஏ-ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்தபுதிய ஸ்மார்ட்போன்.


Click it and Unblock the Notifications