6.4-இன்ச் டிஸ்பிளே, 6000எம்ஏஎச் பேட்டரியுடன் களமிறங்கும் கேலக்ஸி எம்30எஸ்.!
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எம்30 ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகம் செய்யப்பட்டதை தொடர்ந்து, விரைவில் கேலக்ஸி எம்3எஸ் ஸ்மார்ட்போன் மாடலும் அறிமுகம் செய்யப்படும் என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு இந்த ஸ்மார்ட்போன் மாடலின் பல்வேறு அம்சங்கள் ஆன்லைனில் வெளிவந்துள்ளது.

கேலக்ஸி எம்30எஸ் டிஸ்பிளே:
கேலக்ஸி எம்30எஸ் ஸ்மார்ட்போன் மாடல் ஆனது 6.4-இன்ச் எப்எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டு வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு 2400 x 1080 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியின் அடிப்படையில் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேலக்ஸி எம்30எஸ் சிப்செட் வசதி:
கேலக்ஸி எம்30எஸ் சாதனத்தில் ஆக்டோ-கோர் எக்ஸிநோஸ் 9610எஸ்ஒசி சிப்செட் வசதி இடம்பெறும் என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு ஆண்ட்ராய்டு 9பை இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த சாதனம் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

கேமரா அம்சம்:
இந்த சாதனத்தின் பின்புறம் 48எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிளஸ் சென்சார் + 5எம்பி டெப்த் சென்சார் என மூன்று கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது. பின்பு 16எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஷ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு ஆதரவுகளுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சேமிப்பு வசதி:
கேலக்ஸி எம்30எஸ் சாதனத்தில் 4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேட்டரி மற்றும் இணைப்பு ஆதரவுகள்:
கேலக்ஸி எம்30எஸ் ஸ்மார்ட்போனில் 6000எம்ஏஎச் பேட்டரி மற்றும் வைஃபை, ஜிபிஎஸ்,4ஜி வோல்ட்இ, என்எப்சி போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இடம்பெற்றுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications