இன்று களமிறங்கும் 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட கேலக்ஸி எம்30எஸ் ஸ்மார்ட்போன்.!
சாம்சங் நிறுவனத்தின் 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட கேலக்ஸி எம்30எஸ் ஸ்மார்ட்போன் மாடல் ஆனது இன்று விற்பனைக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட கேலக்ஸி எம்30எஸ் மாடல் விலை ரூ.14,999-ஆக உள்ளது.

ஏற்கனவே 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட கேலக்ஸி எம்30எஸ் மாடல் ரூ.12,999-விலையிலும், 6ஜிபி ரேம் மற்றும்128ஜிபி மெமரி கொண்ட கேலக்ஸி எம்30எஸ் மாடல் ரூ.15,999-விலையில் விற்பனைக்கு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சாம்சங் கேலக்ஸி எம்30எஸ் டிஸ்பிளே
சாம்சங் கேலக்ஸி எம்30எஸ் ஸ்மார்ட்போன் 6.4-இன்ச் முழு எச்டி பிளஸ் பிளஸ் சூப்பர் AMOLED டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவந்துள்ளது. பின்பு 2340 x 1080 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

எக்ஸிநோஸ் 9611 பிராசஸர்
குறிப்பாக ஆக்டோ-கோர் சாம்சங் எக்ஸிநோஸ் 9611 பிராசஸர் வசதி மற்றும் ஏஆர்எம் மாலி ஜி72எம்பி3 ஜிபியு செயலியுடன் இந்த சாதனம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 9பை இயங்குதளம் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

கேலக்ஸி எம்30எஸ் கேமரா
சாம்சங் கேலக்ஸி எம்30எஸ் சாதனத்தின் பின்புறம் 48எம்பி பிரைமரி லென்ஸ் + 8எம்பி வைடு ஆங்கிள் லென்ஸ் + 5எம்பி டெப்த் சென்சார் என மூன்று கேமராக்கள் இடம்பெற்றுள்ளன. மேலும் 16எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

சாம்சங் கேலக்ஸி எம்30எஸ் ஸ்மார்ட்போன் ஆனது 4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி வசதியுடன் வெளிவந்துள்ளது. பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றுள் இடம்பெற்றுள்ளது.

6000எம்ஏஎச் பேட்டரி
சாம்சங் கேலக்ஸி எம்30எஸ் சாதனத்தில் 6000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு 4ஜி வோல்ட்இ, வைஃபை,ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளடக்க பல்வேறு இணைப்பு ஆதரவுகள் அடக்கம். குறிப்பாக 15வாட் சார்ஜிங் வசதியும், 29மணி நேர பிளேபேக் வசதியும் கொண்டுள்ளது இந்த சாதனம்.


Click it and Unblock the Notifications