இந்தியா: பட்ஜெட் விலையில் கேலக்ஸி எம்30எஸ் மற்றும் கேலக்ஸி எம்10எஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்.!
சாம்சங் நிறுவனம் இப்போது புதிய கேலக்ஸி எம்30எஸ் மற்றும் கேலக்ஸி எம்10எஸ் ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன்கள் சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சாம்சங் கேலக்ஸி எம்30எஸ் டிஸ்பிளே
சாம்சங் கேலக்ஸி எம்30எஸ் ஸ்மார்ட்போன் 6.4-இன்ச் முழு எச்டி பிளஸ் பிளஸ் சூப்பர் AMOLED டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவந்துள்ளது. பின்பு 2340 x 1080 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். மேலும் ஆக்டோ-கோர் சாம்சங் எக்ஸிநோஸ் 9611 பிராசஸர் வசதி மற்றும் ஏஆர்எம் மாலி ஜி72எம்பி3 ஜிபியு செயலியுடன் இந்த சாதனம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி எம்30எஸ் கேமரா
சாம்சங் கேலக்ஸி எம்30எஸ் சாதனத்தின் பின்புறம் 48எம்பி பிரைமரி லென்ஸ் + 8எம்பி வைடு ஆங்கிள் லென்ஸ் + 5எம்பிடெப்த் சென்சார் என மூன்று கேமராக்கள் இடம்பெற்றுள்ளன. மேலும் 16எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை
நுண்ணறிவு அம்சம் என பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம். குறிப்பாக 6000எம்ஏஎச் பேட்டரி மற்றும் 15வாட் பாஸ்ட் சார்ஜிங்ஆதரவைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

சாம்சங் கேலக்ஸி எம்30எஸ் விலை
4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட கேலக்ஸி எம்30எஸ் ஸ்மார்ட்போனின் விலை ரூ.13,999-ஆக உள்ளது.
6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட கேலக்ஸி எம்30எஸ் ஸ்மார்ட்போனின் விலை ரூ.16,999-ஆக உள்ளது.

சாம்சங் கேலக்ஸி எம்10எஸ் டிஸ்பிளே
சாம்சங் கேலக்ஸி எம்30எஸ் ஸ்மார்ட்போன் ஆனது 6.4-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 1520 x 720 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு இந்த சாதனம்
வெளிவந்துள்ளது. மேலும் 1.6ஜிகிஹெர்ட்ஸஸ் ஆக்டோ-கோர் எக்ஸிநோஸ் 7884பி பிராசஸர் வசதியை கொண்டுள்ளதுஇந்த ஸ்மார்ட்போன் மாடல். மேலும ஆண்ட்ராய்டு 9.0பை இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

சாம்சங் கேலக்ஸி எம்10எஸ் கேமரா
சாம்சங் கேலக்ஸி எம்10எஸ் ஸ்மார்ட்போனின் பின்புறம் 13எம்பி+ 5எம்பி டூயல் கேமரா மற்றும் 8எம்பி செல்பீ கேமராவும் பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் 4000எம்ஏஎச் பேட்டரி மற்றும் பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள்ள அடக்கம். குறிப்பாக 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி மெமரி கொண்ட கேலக்ஸி எம10எஸ் ஸ்மார்ட்போனின் விலை ரூ.8,999-ஆக உள்ளது.


Click it and Unblock the Notifications