Samsung Galaxy M30s: ரூ.12,999-விலையில் விற்பனைக்கு வரும் கேலக்ஸி எம்30ஸ் ஸ்மார்ட்போன்.!

|

கடந்த ஆண்டு சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி எம்30எஸ் ஸ்மார்ட்போன் மாடலை ரூ.13,999-விலையில் அறிமுகம் செய்தது, தற்சமயம் இந்த ஸ்மார்ட்போன் மாடல் ரூ.12,999-விலையில் அமேசான் தளத்தில் விற்பனைக்கு வந்துள்ளது.

கேலக்ஸி எம்30ஸ்

கேலக்ஸி எம்30ஸ்

குறிப்பாக 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட கேலக்ஸி எம்30ஸ் மாடலை தற்சமயம் ரூ.12,999-விலையிலும்,6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட கேலக்ஸி எம்30எஸ் மாடலை ரூ.14,999-விலையிலும் அமேசான் தளத்தில்
வாங்க முடியும். ஆனால் இந்த ஸ்மார்ட்போனுக்கு பிளிப்கார்ட் தளத்தில் விலைகுறைக்கப்படவில்லை.

 எக்ஸிநோஸ் 9611 பிராசஸர்

எக்ஸிநோஸ் 9611 பிராசஸர்

குறிப்பாக ஆக்டோ-கோர் சாம்சங் எக்ஸிநோஸ் 9611 பிராசஸர் வசதி மற்றும் ஏஆர்எம் மாலி ஜி72எம்பி3 ஜிபியு செயலியுடன் இந்த சாதனம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 9பை இயங்குதளம் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

Nokia 400 4G பியூச்சர் போன், நோக்கியா 3310-ஐ விட மலிவான விலையில் அறிமுகமாக தயார்!Nokia 400 4G பியூச்சர் போன், நோக்கியா 3310-ஐ விட மலிவான விலையில் அறிமுகமாக தயார்!

கேலக்ஸி எம்30எஸ் கேமரா

கேலக்ஸி எம்30எஸ் கேமரா

சாம்சங் கேலக்ஸி எம்30எஸ் சாதனத்தின் பின்புறம் 48எம்பி பிரைமரி லென்ஸ் + 8எம்பி வைடு ஆங்கிள் லென்ஸ் + 5எம்பி டெப்த் சென்சார் என மூன்று கேமராக்கள் இடம்பெற்றுள்ளன. மேலும் 16எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

சாம்சங் கேலக்ஸி எம்30எஸ்

சாம்சங் கேலக்ஸி எம்30எஸ் ஸ்மார்ட்போன் ஆனது 4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி வசதியுடன்வெளிவந்துள்ளது. பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றுள் இடம்பெற்றுள்ளது.

ஏர்டெல் டாக் டைம் திட்டங்களுக்கு அணுகலை வழங்கும் ரூ.47 திட்டம்! கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க!ஏர்டெல் டாக் டைம் திட்டங்களுக்கு அணுகலை வழங்கும் ரூ.47 திட்டம்! கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க!

 6000எம்ஏஎச் பேட்டரி

6000எம்ஏஎச் பேட்டரி

சாம்சங் கேலக்ஸி எம்30எஸ் சாதனத்தில் 6000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு 4ஜி வோல்ட்இ, வைஃபை,ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளடக்க பல்வேறு இணைப்பு ஆதரவுகள் அடக்கம்.
குறிப்பாக 15வாட் சார்ஜிங் வசதியும், 29மணி நேர பிளேபேக் வசதியும் கொண்டுள்ளது இந்த சாதனம்.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy M30s Available in India at Rs. 12,999 : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X