அமேசான்: ரூ.14,990-விலையில் விற்பனைக்கு வரும் சாம்சங் கேலக்ஸி எம்30 ஸ்மார்ட்போன்.!
சாம்சங் கேலக்ஸி எம்30 ஸ்மார்ட்போன் மாடல் 6.38-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எம்30 ஸ்மார்ட்போன் மாடல் இன்று மதியம் 12மணி அளவில் அமேசான் தளத்தில்விற்பனைக்கு வருகிறது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் பட்ஜெட் விலையில் வெளிவரும் என்பதால் அதிகளவு விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் பல்வேறு அம்சங்களைப்
பற்றி பார்ப்போம்.

டிஸ்பிளே:
சாம்சங் கேலக்ஸி எம்30 ஸ்மார்ட்போன் மாடல் 6.38-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது,
பின்பு 2220 x 1080 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சிப்செட்:
இந்த ஸ்மார்ட்போன் மாடல் 1.8ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் சாம்சங் எக்ஸிநோஸ் 7904 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது, அதன்பின்பு ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம் இவற்றுள் இடம்பெற்றுள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

சேமிப்பு:
கேலக்ஸி எம்30 ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதியுடன் வெளிவந்துள்ளது,மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றுள் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கேமரா:
கேலக்ஸி எம்30 ஸ்மார்ட்போனின் பின்புறம் 13 எம்.பி. பிரைமரி கேமரா + 5 எம்பி.இரண்டாவது பிரைமரி கேமரா + 5 எம்பி அல்ட்ரா வைடு-ஆங்கிள் கேமரா இடம்பெற்றுள்ளது. பின்பு 16எம்பி செல்பீ கேமரா உடன் எல்இடி பிளாஷ் மற்றும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.

பேட்டரி-விலை :
இந்த சாதனம் 5000எம்ஏஎச் பேட்டரி ஆதரவுடன் வெளிவந்துள்ளது, பின்பு வைஃபை, ஜிபிஎஸ், யுஸ்பி டைப்-சி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் மற்றும் பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம். மேலும் கேலக்ஸி எம்30 சாதனத்தின் ஆரம்ப விலை ரூ.14,990-ஆக உள்ளது. 6ஜிபி ரேம் கொண்ட கேலக்ஸி எம்30 சாதனத்தின் விலை ரூ.17,990-ஆக உள்ளது.


Click it and Unblock the Notifications