6.4-இன்ச் டிஸ்பிளேவுடன் விரைவில் வெளிவரும் அசத்தலான கேலக்ஸி எம்22 ஸ்மார்ட்போன்.!
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எம்22 ஸ்மார்ட்போன் ஆனது விரைவில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பின்பு இந்த சாதனத்தின் மாடல் நம்பர் SM-M225FV/DS என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தனித்துவமான அமசங்களுடன் இந்த கேலக்ஸி எம்22 ஸ்மார்ட்போன் வெளிவரும் என்பதால் உலகம் முழுவதும் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

சாம்சங் கேலக்ஸி எம்22 ஸ்மார்ட்போன் ஆனது கருப்பு, நீலம், வெள்ளை நிறங்களில் வெளிவரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சாதனத்தின் பல்வேறு அமசங்கள் ஆன்லைனில் வெளிவந்துள்ளது. இப்போது இந்த சாதனத்தின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.
சாம்சங் கேலக்ஸி எம்22 ஸ்மார்ட்போன் ஆனது 6.5-இன்ச் எச்டி பிளஸ் சூப்பர் AMOLED இன்பினிட்டி-வி டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு 720x1,600 பிக்சல்கள் தீர்மானம், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவரும் கேலக்ஸி எம்22. அதேபோல் பெரிய டிஸ்பிளே வசதி இருப்பதால் வீடியோ கேம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுக்கு பயன்படுத்த அருமையாக இருக்கும்.

சாம்சங் கேலக்ஸி எம்22 ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி சென்சார் + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார் + 2எம்பி மேக்ரோ லென்ஸ் என மொத்தம் நான்கு கேமராக்கள் உள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும்
என்றெ 13எம்பி செல்பீ கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன். குறிப்பாக இந்த சாதனத்தின் கேமராக்கள் உதவியுடன் துல்லியமான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை எடுக்க முடியும்.
இந்த புதிய ஸ்மார்ட்போன் 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதியைக் கொண்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவைக் கொண்டுள்ளது கேலக்ஸி எம்22 ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த சாதனம் தனித்துவமான வடிவமைப்புடன் வெளிவரும் என்று கூறப்படுகிறது.
கேலக்ஸி எம்22 ஸ்மார்ட்போனில் மீடியாடெக் ஹீலியோ ஜி80 சிப்செட் வசதி உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் வெளிவரும்
சாம்சங் கேலக்ஸி எம்22 ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 25 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான
சாதனம்.

அதேபோல் சமீபத்தில் கேலக்ஸி ஏ52 ஸ்மார்ட்போனின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட கேலக்ஸி ஏ52 ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.26,499-ஆக இருந்தது, தற்போது விலை உயர்த்தப்பட்டு ரூ.27,499-விலையில்
விற்பனை செய்யப்படுகிறது. ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 720 ஜி சிப்செட், 6.5 இன்ச் முழு எச்டி பிளஸ் சூப்பர் அமோலேட் டிஸ்பிளே, 64எம்பி ரியர் கேமரா, 32எம்பி செல்பீ கேமரா, 4,500 எம்ஏஎச் பேட்டரி, 25 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உள்ளிட்ட பல்வேறு
சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த கேலக்ஸி ஏ52 ஸ்மார்ட்போன்.

குறிப்பாக சாம்சங் நிறுவனத்தின் இந்த விலை உயர்வை முதலில் MySmartPrice அறிவித்தது. இது நாட்டில் உள்ள அனைத்து சில்லறை விற்பனை சேனல்களுக்கும் பொருந்தும். சாம்சங் இந்தியாவின் ஆன்லைன் ஸ்டோர் மற்றும் அமேசான் ஆகியவற்றில் அதிகரித்த விலை பிரதிபலித்தது என்பது கவனிக்கத்தக்கது. ஸ்மார்ட்போன் மற்றும் தொழில்நுட்ப செய்திகளின் கூடுதல் தகவல்களுக்கு எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். மற்ற நிறுவனத்தின் ஸ்மார்ட்போன் விபரங்கள் மற்றும் விலை பற்றி அறிய எங்கள் தகவல் கேலரியை பார்வையிடுங்கள்.


Click it and Unblock the Notifications