தரமான அம்சங்களுடன் களமிறங்கும் சாம்சங் கேலக்ஸி எம்22 மாடல்.!
சாம்சங் நிறுனம் விரைவில் பட்ஜெட் விலையில் தனது புதிய கேலக்ஸி எம்22 ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்த சாதனம் 25 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. மேலும்
ஆன்லைனில் கசிந்த இந்த ஸ்மார்ட்போனின் சில அம்சங்களைப் பற்றி சற்று விரிவாகாப் பார்ப்போம்.

சாம்சங் கேலக்ஸி எம்22
சாம்சங் கேலக்ஸி எம்22 ஸ்மார்ட்போனின் மாடல் எண் SM-M225FV என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 4ஜி எல்இடி மற்றும் டூயட்-பேண்ட்
வைஃபை ஆதரவுடன் வெளிவரும் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். அதேபோல் இந்த சாதனத்தின் வடிவமைப்புக்கு அதிக
கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

AMOLED டிஸ்பிளே
இந்த கேலக்ஸி எம்22 ஸ்மார்ட்போன் ஆனது 6.4-இன்ச் எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே மற்றும் 60Hz refresh rate ஆதரவைக்கொண்டுள்ளது. மேலும் கருப்பு, நீலம், வெள்ளை நிறங்களில் கேலக்ஸி எம்22 ஸ்மார்ட்போன் வெளிவரும் என்று கூறப்படுகிறது. மேலும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது கேலக்ஸி எம்22 ஸ்மார்ட்போன் மாடல்.

சாம்சங் கேலக்ஸி எம்22 ஸ்மார்ட்போனில் 4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி உள்ளது. மேலும் கூடுதலாகமெமரி நீட்டிப்பு ஆதரவைக் கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு
ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது.

மீடியாடெக் ஹீலியோ ஜி80 சிப்செட்
இந்த புதிய கேலக்ஸி எம்22 ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்த்த 1.8ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி80 சிப்செட் வசதி உள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் என்பதால் அதிகஎதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

48எம்பி கேமரா
இந்த கேலக்ஸி எம்22 ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி கேமரா உட்பட் மொத்தம் நான்கு கேமராக்கள் இடம்பெறும் என்று கூறப்படுகிறது. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 13எம்பி செல்பீ கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

6000எம்ஏஎச் பேட்டரி
சாம்சங் கேலக்ஸி எம்22 ஸ்மார்ட்போனில் 6000எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. பின்பு 25 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, கைரேகை சென்சார் வசதி உள்ளிட் பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

டூயல் 4 ஜி வோல்டிஇ, வைஃபை 802.11 ஏசி (2.4GHz + 5GHz), புளூடூத் 5.0, ஜிபிஎஸ் + குளோனாஸ்,யூ.எஸ்.பி டைப்-சிபோர்ட், என்எப்சி உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன்.


Click it and Unblock the Notifications