Home
Mobile

64எம்பி கேமராவுடன் சாம்சங் கேலக்ஸி எம்21எஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்.! விலை?

சாம்சங் நறுவனம் தனது புதிய கேலக்ஸி எம்21எஸ் ஸ்மார்ட்போன் மாடலை பிரேசிலில் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் 64எம்பி கேமரா, அருமையான மென்பொருள் வசதி உள்ளட்ட பல்வேறு அம்சங்களை கொண்டு வெளிவந்துள்ளது. மேலும் கேலக்ஸி எம்21எஸ் ஸ்மார்ட்போனின் விலை மற்றும் விவரங்களைப் பார்ப்போம்.

 கேலக்ஸி எம்21எஸ் ஸ்மார்ட்போன் ஆனது

சாம்சங் கேலக்ஸி எம்21எஸ் ஸ்மார்ட்போன் ஆனது 6.4-இன்ச் எப்எச்டி பிளஸ் சூப்பர் AMOLED இன்பினிட்டி-யு டிஸ்பிளேவடிமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 1080 x 2340 பிக்சல் தீர்மானம், 420 nits பிரைட்நஸ் வசதி மற்றும் சிறந்தபாதுகாப்பு வசதியுடன் வெளிவந்துள்ளது.

ஸ்மார்ட்போனில் 4ஜிபி ரேம்

கேலக்ஸி எம்21எஸ் ஸ்மார்ட்போனில் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் கூடுதல்மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த சாதனம் வெளிவந்துள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது.

 ஸ்மார்ட்போன் மாடலில்

கேலக்ஸி எம்21எஸ் ஸ்மார்ட்போன் மாடலில் எக்ஸிநோஸ் 9611 ஆக்டோ-கோர் எஸ்ஒசி சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் One UI அடிப்படையிலான ஆண்ட்ராய்டு 10 இல் இயங்குகிறது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

 மூன்று கேமராக்கள்

இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி பிரைமரி லென்ஸ் + 8எம்பி செகண்டரி சென்சார் + 5எம்பி டெப்த் சென்சார் என மொத்தம்மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் 32எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம்என பல்வேறு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

ஸ்மார்ட்போனில் 6000 எம்ஏஎச் பேட்டரி

இந்த கேலக்ஸி எம்21எஸ் ஸ்மார்ட்போனில் 6000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 15 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த சாதனத்தின் பின்புறம் கைரேகை சென்சார் உள்ளது.

4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11, புளூடூத் 5,

டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11, புளூடூத் 5, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, டூயல் சிம், 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்டபல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த கேலக்ஸி எம்21எஸ் ஸ்மார்ட்போன் மாடல். மேலும் கேலக்ஸி எம்21எஸ்ஸ்மார்ட்போனின் விலை (இந்திய மதிப்பில்) ரூ.20,500-ஆக உள்ளது.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy M21s Launched: Specs, Features and More: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X