ரூ.12,999-விலையில் சாம்சங் கேலக்ஸி எம்21 ஸ்மார்ட்போன் அறிமுகம்.!
சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி எம்21 ஸ்மார்ட்போன் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது, குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் பட்ஜெட் விலையில் சிறந்த அம்சங்களுடன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் வரும் மார்ச் 23-ம் தேதி இந்த ஸ்மார்ட்போன் அமேசான் தளத்தில் விற்பனைக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அசத்தலான டிஸ்பிளே வசதி
சாம்சங் கேலக்ஸி எம்21 ஸ்மார்ட்போன் 6.4-இன்ச் முழு எச்டி பிளஸ் இன்பினிட்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 1080x2340 பிக்சல் திர்மானம் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டுவெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி
சாம்சங் கேலக்ஸி எம்21 சாதனத்தில் 4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது.மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

8எம்பி பிரைமரி சென்சார்
இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி சென்சார் + 8எம்பி வைடு ஆங்கிள் லென்ஸ் + 5எம்பி டெப்த் சென்சார் என மூன்று கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் 20எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

சிப்செட் வசதி
குறிப்பாக இந்த கேலக்ஸி எம்21 ஸ்மார்ட்போனில் சாம்சங் எக்ஸிநோஸ் 9611எஸ்ஒசி சிப்செட் வசதி உடன் மாலி-ஜி72 எம்பி3 ஜிபியு வசதியும் இடம்பெற்றுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த அட்டகாசமான சாதனம் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

6000எம்ஏஎச் பேட்டரி
சாம்சங் கேலக்ஸி எம்21 ஸ்மார்ட்போனில் 6000எம்ஏஎச் பேட்டரி வசதி இடம்பெற்றுள்ளது, எனவே சார்ஜ் பற்றி கவலை இருக்காது, மேலும் 15வாட் பாஸ்ட் சார்ஜ் ஆதரவு கொண்டு இந்த அட்டகாசமான சாதனம் வெளிவந்துள்ளது.

இணைப்பு ஆதரவுகள்
4 ஜி வோல்டிஇ, வைஃபை, புளூடூத், ஜிபிஎஸ்/ ஏ-ஜிபிஎஸ், யூ.எஸ்.பி டைப்-சி மற்றும் 3.5எம்எம் ஆடியோஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம். மேலும் கைரேகை சென்சார் உட்பட பல்வேறு வசதிகளை கொண்டுள்ளது இந்தஅட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி வசதி கொண்ட கேலக்ஸி எம்21 ஸ்மார்ட்போனின் விலை ரூ.12,999-ஆக உள்ளது. 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி கொண்ட கேலக்ஸி எம்21 ஸ்மார்ட்போனின் விலை பற்றிய தகவலை இன்னும் வெளியிடவில்லை அந்நிறுவனம்.


Click it and Unblock the Notifications