குறிப்பா இந்த சாம்சங் கேலக்ஸி மாடல் பயனர்களுக்கு ஒரு நற்செய்தி!

|

ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்ட ஒன் யுஐ 3.0 அப்டேட் சாம்சங் கேலக்ஸி எம் 21 மாடல் உபயோகிக்கும் இந்திய பயனர்களுக்கு கிடைக்கிறது.

சாம்சங் கேலக்ஸி எம் 21 ஸ்மார்ட்போன்

சாம்சங் கேலக்ஸி எம் 21 ஸ்மார்ட்போன்

முன்னதாக சாம்சங் கேலக்ஸி எஃப் 41 பயனர்களுக்கு ஒன் யுஐ 3.0 ஆண்ட்ராய்டு 11 புதுப்பிப்பு வெளியிடப்பட்டது. இதையடுத்து தற்போது சாம்சங் கேலக்ஸி எம் 21 ஸ்மார்ட்போன் பயனர்களுக்கும் ஆண்ட்ராய்டு 11 புதிப்பிப்பு வசதி கிடைக்கிறது.

ஆண்ட்ராய்டு பாதுகாப்பு புதுப்பிப்பு

ஆண்ட்ராய்டு பாதுகாப்பு புதுப்பிப்பு

சாம்சங் கேலக்ஸி எம்21 மாடலுக்கான புதிப்பிப்பு M215FXXU2BUAC என்ற எண்ணுடன் வருகிறது. இந்த அப்டேட் ஜனவரி 2021 ஆம் ஆண்டுக்கான ஆண்ட்ராய்டு பாதுகாப்பு புதுப்பிப்பை கொண்டு வருகிறது. இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி எம் 21 மாடல் உபயோகிக்கும் பயனர்களுக்கு ஆண்ட்ராய்டு 11 அடிப்படையிலான ஒன் யுஐ 3.0 புதுப்பிப்பு கிடைக்கிறது.

புதிய ஐகான்களோடு வரும்

புதிய ஐகான்களோடு வரும்

இந்த புதுப்பிப்பு அழைப்பு பின்னணியை சேர்ப்பதற்கும், சாதன காட்சியை சரி செய்வதற்கும் புதிய ஐகான்களை கொண்டு வருவதாக கூறப்படுகிறது. சாட்டிங் பப்பிள்ஸ் அம்சம், மீடியா கண்ட்ரோல்ஸ், ஒழுங்கமைக்கப்பட்ட நோட்டிபிகேன், புதிய தனியுரிமை கட்டுப்பாடுகள் உள்ளிட்டவைகளை கொண்டிருக்கிறது.

புதுப்பிப்பு அறிவிப்பு விரைவில் கிடைக்கும்

புதுப்பிப்பு அறிவிப்பு விரைவில் கிடைக்கும்

சாம்சங் கேலக்ஸி எம்21 பயனர்கள் இந்த புதுப்பிப்பு அறிவிப்பை விரைவில் பெறுவார்கள் என கூறப்படுகிறது. அல்லது செட்டிங்க்ஸ் உள்ளே சென்று சாஃப்ட்வேர் அப்டேட் தேர்வுக்குள் சென்று பதிவிறக்கம் மற்றும் இன்ஸ்டால் ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.

6.4 இன்ச் முழு எச்டி ப்ளஸ் டிஸ்ப்ளே

6.4 இன்ச் முழு எச்டி ப்ளஸ் டிஸ்ப்ளே

சாம்சங் கேலக்ஸி எம் 21 ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கையில் இது 6.4 இன்ச் முழு எச்டி ப்ளஸ் டிஸ்ப்ளே 2340 x 1080 பிக்சல்கள் தீர்மானத்துடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் எக்ஸினோஸ் 9611 செயலி மூலம் இயக்கப்படுகிறது. இது டைப்சி யூஎஸ்பி போர்ட் ஆதரவு உள்ளது.

 6000 எம்ஏஎச் பேட்டரி

6000 எம்ஏஎச் பேட்டரி

இந்த ஸ்மார்ட்போனில் 6000 எம்ஏஎச் பேட்டரி, 15 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உள்ளது. பாதுகாப்பு அம்சத்திற்கு ஸ்மார்ட்போனின் பின்புறமாக பொருத்தப்பட்ட கைரேகை சென்சார் உள்ளது. முன்புறத்தில் 20 மெகாபிக்சல் செல்பி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. அதோடு 48 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 8 மெகாபிக்சல் இரண்டாம் நிலை கேமரா, 5 மெகாபிக்சல் மூன்றாம் நிலை கேமரா உள்ளது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Samsung Galaxy M21 Smartphone Users Gets Android 11 OS Update in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X