சாம்சங் கேலக்ஸி எம்21 ஸ்மார்ட்போனுக்கு திடீர் விலைகுறைப்பு.!
சாம்சங் நிறுத்தின் கேலக்ஸி எம்21 ஸ்மார்ட்போன் மாடலுக்கு விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட கேலக்ஸி எம்21 ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.12,999-ஆக இருந்தது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு
ரூ.11,999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட கேலக்ஸி எம்21 ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.14,999-ஆக இருந்தது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.13,999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் இந்த விலைகுறைப்பு ஆஃப்லைன் கடைகளில் மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

6.4-இன்ச் முழு எச்டி பிளஸ் இன்பினிட்டி டிஸ்பிளே
சாம்சங் கேலக்ஸி எம்21 ஸ்மார்ட்போன் 6.4-இன்ச் முழு எச்டி பிளஸ் இன்பினிட்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 1080x2340 பிக்சல் திர்மானம் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சாம்சங் கேலக்ஸி எம்21 சாதனத்தில் 4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது.மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

48எம்பி பிரைமரி சென்சார்
இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி சென்சார் + 8எம்பி வைடு ஆங்கிள் லென்ஸ் + 5எம்பி டெப்த் சென்சார் என மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் 20எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

எக்ஸிநோஸ் 9611எஸ்ஒசி சிப்செட்
குறிப்பாக இந்த கேலக்ஸி எம்21 ஸ்மார்ட்போனில் சாம்சங் எக்ஸிநோஸ் 9611எஸ்ஒசி சிப்செட் வசதி உடன் மாலி-ஜி72 எம்பி3 ஜிபியு வசதியும் இடம்பெற்றுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த அட்டகாசமான சாதனம் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

6000எம்ஏஎச் பேட்டரி
சாம்சங் கேலக்ஸி எம்21 ஸ்மார்ட்போனில் 6000எம்ஏஎச் பேட்டரி வசதி இடம்பெற்றுள்ளது, எனவே சார்ஜ் பற்றி கவலை இருக்காது, மேலும் 15வாட் பாஸ்ட் சார்ஜ் ஆதரவு கொண்டு இந்த அட்டகாசமான சாதனம் வெளிவந்துள்ளது.

3.5எம்எம் ஆடியோஜாக்
4 ஜி வோல்டிஇ, வைஃபை, புளூடூத், ஜிபிஎஸ்/ ஏ-ஜிபிஎஸ், யூ.எஸ்.பி டைப்-சி மற்றும் 3.5எம்எம் ஆடியோஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம். மேலும் கைரேகை சென்சார் உட்பட பல்வேறு வசதிகளை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.


Click it and Unblock the Notifications