6000எம்ஏஎச் பேட்டரியுடன் களமிறங்கும் கேலக்ஸி எம்21 ஸ்மார்ட்போன்.!
சாம்சங் நிறுவனம் விரைவில் தனது புதிய கேலக்ஸி எம்21 ஸ்மார்ட்போன் மாடலை வரும் மார்ச்-16-ம் தேதி அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது, குறிப்பாக இந்த சாதனம் பட்ஜெட் விலையில் அருமையான தொழில்நுட்ப வசதியுடன் வெளிவரும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேலக்ஸி எம்21
குறிப்பாக இந்த கேலக்ஸி எம்21 ஸ்மார்ட்போன் ஆனது கேலக்ஸி எம்31 ஸ்மார்ட்போனை விட சிறந்த அம்சங்கள் கொண்டு வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆன்லைனில் கசிந்த இந்த ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

6.5-இன்ச் முழு எச்டி டிஸ்பிளே
சாம்சங் கேலக்ஸி எம்21 ஸ்மார்ட்போன் ஆனது 6.5-இன்ச் முழு எச்டி டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவரும் தகவல் வெளிவந்துள்ளது, மேலும் 1080 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

48எம்பி பிரைமரி கேமரா
வெளிவந்த தகவலின் அடிப்படையில் இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி கேமரா உட்பட மொத்தம் மூன்று கேமரா வசதி இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் 16எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு வசதிகளுடன் இந்த சாதனம் வெளிவரும்.

ஆண்ட்ராய்டு 10
குறிப்பாக இந்த கேலக்ஸி எம்21 ஸ்மார்ட்போனில் சாம்சங் எக்ஸிநோஸ் 9611எஸ்ஒசி சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த அட்டகாசமான சாதனம் வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி எம்21 சாதனத்தில் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கார்னிங் கொரில்லா கிளாஸ் ஆதரவு
இந்த சாம்சங் கேலக்ஸி எம்21 ஸ்மார்ட்போன் ஆனது கருப்பு, நீலம், பசுமை போன்ற நிறங்களில் வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, இது தவிர கார்னிங் கொரில்லா கிளாஸ் ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான சாதனம்.

6000எம்ஏஎச் பேட்டரி
6000எம்ஏஎச் பேட்டரி சாம்சங் கேலக்ஸி எம்21 ஸ்மார்ட்போனில் 6000எம்ஏஎச் பேட்டரி வசதி இடம்பெற்றுள்ளது, எனவே சார்ஜ் பற்றி கவலை இருக்காது, மேலும் பாஸ்ட் சார்ஜ் ஆதரவு கொண்டு இந்த அட்டகாசமான சாதனம் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி எம்21 ஸ்மார்ட்போனில் வைஃபை,ஜிபிஎஸ், என்எப்சிஇமைக்ரோ யுஎஸ்பி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகள் அடக்கம்.


Click it and Unblock the Notifications