மிகவும் எதிர்பார்த்த கேலக்ஸி எம்21 ஸ்மார்ட்போன் இன்று அறிமுகம்.!
சாம்சங் நிறுவனத்தின் மிகவும் எதிர்பார்த்த கேலக்ஸி எம்21 ஸ்மார்ட்போன் மாடல் இன்று மதியம் 12மணி அளிவில் அறிமுகம் செய்யப்படுகிறது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் 6000எம்ஏஎச் பேட்டரி, சிறந்த கேமரா வசதி, அருமையான மென்பொருள் வசதி உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுடன் வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஏற்கனவே ஆன்லைனில் கசிந்த இந்த ஸ்மார்ட்போனின் சில அம்சங்களைப் பார்ப்போம்.

6.4-இன்ச் முழு எச்டி டிஸ்பிளே
சாம்சங் கேலக்ஸி எம்21 ஸ்மார்ட்போன் ஆனது 6.4-இன்ச் முழு எச்டி டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவரும் தகவல் வெளிவந்துள்ளது, மேலும் 1080 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

48எம்பி பிரைமரி கேமரா
வெளிவந்த தகவலின் அடிப்படையில் இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி கேமரா உட்பட மொத்தம் மூன்று கேமரா வசதி இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் 20எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு வசதிகளுடன் இந்த சாதனம் வெளிவரும்.

குறிப்பாக இந்த கேலக்ஸி எம்21 ஸ்மார்ட்போனில் சாம்சங் எக்ஸிநோஸ் 9611எஸ்ஒசி சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த அட்டகாசமான சாதனம் வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி எம்21 சாதனத்தில் 4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கார்னிங் கொரில்லா கிளாஸ் ஆதரவு
இந்த சாம்சங் கேலக்ஸி எம்21 ஸ்மார்ட்போன் ஆனது கருப்பு, நீலம், பசுமை போன்ற நிறங்களில் வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, இது தவிர கார்னிங் கொரில்லா கிளாஸ் ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான சாதனம்.

6000எம்ஏஎச் பேட்டரி
சாம்சங் கேலக்ஸி எம்21 ஸ்மார்ட்போனில் 6000எம்ஏஎச் பேட்டரி வசதி இடம்பெற்றுள்ளது, எனவே சார்ஜ் பற்றி கவலை இருக்காது, மேலும் பாஸ்ட் சார்ஜ் ஆதரவு கொண்டு இந்த அட்டகாசமான சாதனம் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி எம்21 ஸ்மார்ட்போனில் வைஃபை,ஜிபிஎஸ், என்எப்சிஇமைக்ரோ யுஎஸ்பி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகள் அடக்கம். குறிப்பாக ரூ.15,999-விலையில் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications