சாம்சங் கேலக்ஸி ஸ்மார்ட்போன் வாங்க ஐடியா இருக்கா: இந்த மாடலுக்கு அதிரடி விலைக்குறைப்பு!
இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி எம்21 ஸ்மார்ட்போனுக்கு ரூ.1000 விலைக்குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. விலைக்குறைப்புக்கு பிறகு சாம்சங் எம்21 ஸ்மார்ட்போனின் விலை விவரங்கள் குறித்து பார்க்கலாம்.

இந்தியாவில் விலைக்குறைப்பு அறிவித்த பிறகு சாம்சங் கேலக்ஸி எம்21 ஸ்மார்ட்போனின் 4ஜிபி ரேம் 64 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் விலை ரூ.12,999 எனவும் 6ஜிபி ரேம் 128ஜிபி உள்சேமிப்பு விலை ரூ.14,999 எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சாம்சங் கேலக்ஸி எம் 21 விலைக்குறைப்பு ஆஃப்லைன் சந்தையில் மட்டுமே கிடைப்பதாக மைஸ்மார்ட் பிரைஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்பு சாம்சங் கேலக்ஸி எம்21 ஸ்மார்ட்போன் 4 ஜிபி வேரியண்ட் ரூ.13,999 எனவும் 6ஜிபி வேரியண்ட் ரூ.15,999 எனவும் இருந்தது.
சாம்சங் கேலக்ஸி எம்21 மாடல் கடந்தாண்டு இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. கேலக்ஸி எம் 21 மிட்நைட் ப்ளூ, ரேவன் பிளாக் ஆகிய இரண்டு வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் ஒன் யுஐ3.0 ஆண்ட்ராய்டு 11 புதுப்பிப்பை பெற்றுள்ளது.
சாம்சங் கேலக்ஸி எம் 21 ஸ்மார்ட்போன் 6.4 இன்ச் முழு எச்டி ப்ளஸ் இன்பினிட்டி யு சூப்பர் அமோலெட் டிஸ்ப்ளே திரை தெளிவுத்திறனுடன் வருகிறது. சாம்சங் எக்ஸினோஸ் 9611 செயலி மூலம் இந்த ஸ்மார்ட்போன் இயக்கப்படுகிறது. பாதுகாப்பு அம்சத்திற்கு ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் கைரேகை சென்சார் இருக்கிறது.
சாம்சங் கேலக்ஸி எம்21 ஸ்மார்ட்போனில் 48 எம்பி பிரதான கேமரா, 8 எம்பி இரண்டாம் நிலை கேமரா, 5 எம்பி மூன்றாம் நிலை கேமரா ஆகியவை இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் முன்புறத்தில் 20 மெகாபிக்சல் செல்பி கேமரா பொருத்தப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications