Home
Mobile

சாம்சங் கேலக்ஸி எம்21 ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.!

இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் அறிமுகம் செய்யப்பட்ட கேலக்ஸி எம்21 ஸ்மார்ட்போன் மாடலுக்கு ரூ.500 என்கிற விலைக் குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் 4ஜிபி ரேம் + 64ஜிபி மெமரி வேரியண்ட் ஆனது முதலில் ரூ.13,499-க்கு அறிமுகமானது. பின்னர் மொபைல் போன்களின் மீதான ஜிஎஸ்டி உயர்வுக்குப் பிறகு, அதன் விலை நாட்டில் ரூ.14,499-ஆக உயர்ந்தது.

விலைகுறைக்கப்பட்டு

இப்போது இந்த சாம்சங் ஸ்மார்ட்போனின் விலைகுறைக்கப்பட்டு ரூ.13,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இது பேஸிக் 4ஜிபி ரேம் + 64ஜிபி மெமரி கொண்ட சாதனத்தின் விலையாகும். ஆனால் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட கேலக்ஸி எம்21 மாடல் ரூ.15,999-க்கு வாங்க கிடைக்கிறது.

ன விலையில் வாங்கலாம். அதா

இருப்பினும் அமேசான் மற்றும் சாம்சங்.காமில் நடைபெற்று வரும் பண்டிகை விற்பனையின் போது, இந்த ஸ்மார்ட்போனை இன்னும் மலிவான விலையில் வாங்கலாம். அதாவது 4ஜிபி ரேம் கொண்ட கேலக்ஸி எம்21 மாடலை ரூ.12,499 விலையிலும், பின்பு 6ஜிபி ரேம் கொண்ட கேலக்ஸி எம்21 மாடலை ரூ.14,999 விலையிலும் வாங்கலாம் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. இந்த அட்டகாசமான தள்ளுபடி அமேசானில் அக்டோபர் 23-ம் தேதி வரையும் மற்றும் சாம்சங்கின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அக்டோபர் 22-ம் தேதி வரையும் செல்லுபடியாகும்.

ங் கேலக்ஸி எம்21 ஸ்மார்ட்போன் 6.4-இன்ச்

சாம்சங் கேலக்ஸி எம்21 ஸ்மார்ட்போன் 6.4-இன்ச் முழு எச்டி பிளஸ் இன்பினிட்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 1080x2340 பிக்சல் தீர்மானம் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ்,

சாம்சங் கேலக்ஸி எம்21 சாதனத்தில் 4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி சென்சார் + 8எம்பி வைடு ஆங்கிள் லென்ஸ் + 5எம்பி டெப்த் சென்சார் என மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் 20எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

ண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை

குறிப்பாக இந்த கேலக்ஸி எம்21 ஸ்மார்ட்போனில் சாம்சங் எக்ஸிநோஸ் 9611 சிப்செட் வசதி உடன் மாலி-ஜி72 எம்பி3 ஜிபியு வசதியும் இடம்பெற்றுள்ளது. பின்பு ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த அட்டகாசமான சாதனம் வெளிவந்துள்ளது.

 எம்21 ஸ்மார்ட்போனில்

சாம்சங் கேலக்ஸி எம்21 ஸ்மார்ட்போனில் 6000எம்ஏஎச் பேட்டரி வசதி இடம்பெற்றுள்ளது, எனவே சார்ஜ் பற்றி கவலை இருக்காது. மேலும் 15வாட் பாஸ்ட் சார்ஜ் ஆதரவு கொண்டு இந்த அட்டகாசமான சாதனம் வெளிவந்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் மிட்நைட் ப்ளூ மற்றும் ரேவன் பிளாக் ஆகிய இரண்டு வண்ண விருப்பங்களில் விற்பனைக்கு வரும்.

புளூடூத், ஜிபிஎஸ்/ ஏ-

4ஜி வோல்டிஇ, வைஃபை, புளூடூத், ஜிபிஎஸ்/ ஏ-ஜிபிஎஸ், யூ.எஸ்.பி டைப்-சி மற்றும் 3.5எம்எம் ஆடியோஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம். மேலும் கைரேகை சென்சார் உட்பட பல்வேறு வசதிகளை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Samsung Galaxy M21 Gets Price Cut in India: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X