இந்தியா: கேலக்ஸி எம்21,கேலக்ஸி ஏ50எஸ் ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.!
சாம்சங் நிறுவனம் இந்தியாவில் கேலக்ஸி எம்21, கேலக்ஸி ஏ50எஸ் ஸ்மார்ட்போன்களுக்கு விலைகுறைப்பு அறிவித்துள்ளது, அதன்படி இந்நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இந்தியா இணையதளத்தில் புதிய விலைகளுடன் பட்டியலிடப்பட்டுள்ளன.

4ஜிபி ரேம் கொண்ட கேலக்ஸி எம்21 ஸ்மார்ட்போன் மாடலுக்கு விலைகுறைக்கப்பட்டு ரூ.13,199-ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது, அதேபோல் 6ஜிபி ரேம் கொண்ட கேலக்ஸி எம்21 ஸ்மார்ட்போன் மாடலுக்கு விலைகுறைக்கப்பட்டு ரூ.15,499-ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் கேலக்ஸி ஏ50எஸ் ஸ்மார்ட்போன் மாடலுக்கு விலைகுறைக்கப்பட்டு 4ஜிபி ரேம் வேரியண்ட் ரூ.18,599மற்றும் 6ஜிபி ரேம் ரூ.20,561-என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி ஏ50எஸ் டிஸ்பிளே
சாம்சங் கேலக்ஸி ஏ50எஸ் ஸ்மார்ட்போன் ஆனது 6.4-இன்ச் முழு எச்டி இன்பினிட்டி-யு டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 2,340 x 1,080 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த திரைவிகிதம் மற்றும் பாதுகாப்பு அம்சங்களுடன் வெளிவந்துள்ளது.

சாம்சங் கேலக்ஸி ஏ50எஸ் சிப்செட்
இந்த ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் எக்ஸிநோஸ் 9611 10என்எம் எஸ்ஒசி சிப்செட் உடன் மாலி-ஜி17 ஆதரவும் இடம்பெற்றுள்ளது, மேலும்ஆண்ட்ராய்டு 9.0பை இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளதால் இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

கேலக்ஸி ஏ50எஸ் பேட்டரி
இந்த சாம்சங் கேலக்ஸி ஏ50எஸ் ஸ்மார்ட்போனில் 4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதியும் உள்ளது, பின்பு கூடுதலாக
மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த சாதனம் வெளிவந்துள்ளது. இந்த கேலக்ஸி ஏ50எஸ் ஸ்மார்ட்போனில் 4000எம்ஏஎச் பேட்டரி ஆதரவும்,
15வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது, மேலும் வைஃபை, ஜிபிஎஸ், 4ஜி வோல்ட்இ, என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போர்ட் போன்றபல்வேறு இணைப்பு ஆதரவுகள் அடக்கம்.

கேலக்ஸி ஏ50எஸ் கேமரா
கேலக்ஸி ஏ50எஸ் ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி சென்சார் +5எம்பி டெப்த் சென்சார் +8எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் 32எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

சாம்சங் கேலக்ஸி எம்21 டிஸ்பிளே
சாம்சங் கேலக்ஸி எம்21 ஸ்மார்ட்போன் 6.4-இன்ச் முழு எச்டி பிளஸ் இன்பினிட்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 1080x2340 பிக்சல் திர்மானம் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சாம்சங் கேலக்ஸி எம்21 கேமரா
சாம்சங் கேலக்ஸி எம்21 சாதனத்தில் 4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது.மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி சென்சார் + 8எம்பி வைடு ஆங்கிள் லென்ஸ் + 5எம்பி டெப்த் சென்சார் என மூன்று கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் 20எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்

கேலக்ஸி எம்21 சிப்செட் வசதி
குறிப்பாக இந்த கேலக்ஸி எம்21 ஸ்மார்ட்போனில் சாம்சங் எக்ஸிநோஸ் 9611எஸ்ஒசி சிப்செட் வசதி உடன் மாலி-ஜி72 எம்பி3 ஜிபியு வசதியும் இடம்பெற்றுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த அட்டகாசமான சாதனம் வெளிவந்துள்ளது
என்பது குறிப்பிடத்தக்கது. சாம்சங் கேலக்ஸி எம்21 ஸ்மார்ட்போனில் 6000எம்ஏஎச் பேட்டரி வசதி இடம்பெற்றுள்ளது, எனவே சார்ஜ் பற்றி கவலை
இருக்காது, மேலும் 15வாட் பாஸ்ட் சார்ஜ் ஆதரவு கொண்டு இந்த அட்டகாசமான சாதனம் வெளிவந்துள்ளது.


Click it and Unblock the Notifications